தென்காசியில் இலத்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மது என்ற மாடசாமி. 24 வயதான இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்னார் மாயமானார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த நிலையில், லட்சுமணன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் உள்ள கழிவு நீர் தொட்டியில் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இது தொடர்பாக விசாரணை நடத்திய இந்தக் எலும்புக் கூடுகள் மாடசாமிதான் என்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில் மாடசாமிக்கு கள்ளக் காதலி ஒருவர் இருப்பது தெரியவந்தது.
அவர் அதேபகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் ஆவார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளியாகின.
மாடசாமிக்கும், மாரியம்மாளுக்கும் இடையே கள்ளக் காதல் இருந்துவந்துள்ளது. இதனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் மாடசாமியின் தொல்லை அதிகமாக அவரை தீர்த்துக் கட்டிய எண்ணிய மாரியம்மாள், “ஆங்கில ஆபாச படங்களில் வருவதுபோல் உல்லாசம் அனுபவிக்கலாம் எனக் கூறி அவரின் கை கால்களை கட்டிப் போட்டு தலையணையை எடுத்து முகத்தில் வைத்து அழுத்தி கொன்றுள்ளார்.
இதையடுத்து மாரியம்மள், அவரது 17 வயது தம்பி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தென்காசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“