/indian-express-tamil/media/media_files/ibihfSOub3732FVfY5RW.png)
விவசாயி அருள் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இந்த சிப்காட் விரிவாக்கத்துக்காக அந்தப் பகுதியில் உள்ள 11 ஊராட்சிகளில் 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்பட கையகப்படுத்த திமுக அரசு திட்டமிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் ஜூலை 2ஆம் தேதி முதல் 126 நாள்களுக்கு தொடர் போராட்டம் நடைபெற்றது.
அப்போது, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது, தடையை மீறி பேரணி சென்றது, காவல் துறை வாகனங்களை சேதப்படுத்தியது, ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதியின்றி கூடியது என 11 வழக்குகள் போராட்டக்காரர்கள் மீது பதியப்பட்டன.
வேளாண் உரிமை செயற்பாட்டாளர் அருள் ஆறுமுகம் உட்பட 22 பேரை கடந்த 4-ம் தேதி கைது செய்த போலீசார் அவர்களை வெவ்வேறு சிறைகளில் அடைத்தனர்.
இவர்களில் அருள் ஆறுமுகம், பச்சையப்பன், மாசிலாமணி, தேவன், பாக்கியராஜ், சோழன், விஜயன் ஆகிய 7 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது.
விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பதியப்பட்டதற்கு அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர் மற்றும் அமமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதையடுத்து, அருள் ஆறுமுகம் நீங்கலாக மற்றவர்களின் குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த குண்டர் சட்டத்துக்கு எதிராக அருள் தரப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.
இதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் அருள் ஆறுமுகம் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, உள்நோக்கத்துடன் அருள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அருள் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.