மக்கள் விரோத தமிழக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என தேமுதிக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேமுதிகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சிவகங்கையில் இன்று தொடங்கியது. அனைத்து மாவட்டங்களில் இருந்தும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விபரம் வருமாறு:
கட்சியின் நிரந்தர பொது செயலாளராக விஜயகாந்த் தேர்வு செய்யப்படுகிறார். அவர் கட்சியின் வளர்ச்சிக்காகவும் நிர்வாகிகளை நியமிப்பது போன்ற எந்த முடிவையும் எடுக்கும் அதிகாரத்தை பொதுக்குழு செயற்குழு வழங்குகிறது.
கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் இருந்தும், கட்சியின் தொண்டர்களாக இருந்து உயிர் நீத்த அனைவரின் ஆன்மா சாந்தியடையவும், குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை பொதுக்குழு தெரிவித்துக் கொள்கிறது.
மருத்துவ சேர்க்கையில் நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்குப் பெற்றுத்தருவோம் மாணவர்கள் வாழ்க்கையில் விளையாடிய மாநில அரசை கண்டிக்கிறது.
ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் தங்கள் பதவியை காப்பாற்றுவதிலேயே கவனமாக இருக்கும் தமிழக அரசி கண்டிக்கிறோம்.
மக்களுக்கு முறையாக ரேஷன் பொருட்களை வழங்காத தமிழக அரசை பொதுக்குழு கண்டிக்கிறது.
தேமுதிகவினர் மீது போட்டப்பட்ட வழங்குகள் இழுதடித்து வரப்படுகிறது. அந்த வழக்குகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து, தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நீரை பெற்றுத்தர மத்திய மாநில அரசை கேட்டுக் கொள்கிறது.
அரசுக்கு எதிராக போராடுபவர்கள் மீது குண்டர் சட்டம் போட்டு சிறையில் அடைப்பதை பொதுக்குழு கண்டிக்கிறது.
மக்கள் பல்வேறு நோயுக்கு ஆளாகி வருகிறார்கள். ஆனால் முதல்வர் அதைப் பற்றி கவலைப்படாமல் புனித நீராடி வருகிறார். அவரை பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.
வீடு கட்ட விரும்புவர்களுக்கு எம்.சாண்ட் மணல் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்.
தமிழகத்தில் மக்கள் விரும்பும் ஆட்சி நடைபெறவில்லை. மக்கள் விரும்பாத ஆட்சி நிலவுக்கிறது. மக்கள் புரட்சி வெடித்து ஆட்சியாளர்களை விரட்டி அடிக்கும் முன்பு பதவி விலக வேண்டும் என்று இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.