Advertisment

சென்னை போலீஸ் மீது ஆளுனர் மாளிகை பகிரங்க புகார்: 'நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே கொலை செய்யப்படுகிறது'

ஆளுனர் மாளிகை வாசல் முன்பு பெட்ரொல் வெடிகுண்டு வீசிய வழக்கில் ரவுடி கருக்கா வினோத் என்பவர் கைது செய்யப்பட்டார். தற்போது இவர் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
TN Governors house Petrol bomb thrown case FIR Release Tamil News

ஆளுனர் மாளிகை முன்பு நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

Petrol bomb attack on Raj Bhavan : சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு நேற்று (அக்.25) வீசப்பட்டது. ராஜ்பவன் முன்பு பெட்ரோல் குண்டு வீசி விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்றவரை பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அந்த நபர் ரவுடி கருக்கா வினோத் என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து மேலும் 3 குண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisment

தற்போது, ரவுடி கருக்கா வினோத் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கவர்னர் மாளிகையில் இருந்து அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.

அந்த அறிக்கையில், “ராஜ்பவனில் தாக்குதல் குறித்த புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை. தன்னிலையாக பதிவு செய்யப்பட்ட புகார், தாக்குதலை சாதாரண நாசகார செயலாக நீர்த்துப் போக செய்துவிட்டது.

அவசர கதியில் கைது மெற்கொள்ளப்பட்டு மாஜிஸ்திரேட்டை நள்ளிரவில் எழுப்பி குற்றஞ்சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டுவிட்டதால் பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்தக்கூடிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது.

நியாமான விசாரணை தொடங்கும் முன்பே கொல்லப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Governor Rn Ravi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment