தமிழ்நாடு ஆளுநராக முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான ஆர்.என். ரவி பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு சர்ச்சையான கருத்துக்களை அதிரடியாக கூறிவருகிறார். திருவள்ளூர் இந்து ஞானி உள்ளிட்ட அவரது கருத்துகள் பரபரப்பான அரசியல் சூழலை ஏற்படுத்திவருகின்றன.
இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி, “குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டும் எனத் தெரிவித்ததாக வதந்திகள் பரவின. இந்த வதந்திகள் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில் இதற்கு ஆளுநர் மாளிகை தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
அந்த விளக்கத்தில், “கிராம கோவில் திருவிழாக்களை தடை செய்ய வேண்டும் என ஆளுநர் தரப்பு ஒருபோதும் கூறவில்லை. இதுபோன்ற தவறான செய்திகளை மக்கள் முன்பு பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “இதுபோன்ற பொய் செய்திகளை பரப்பும் நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“