national-green-tribunal | திருவொற்றியூர் எர்ணாவூர் கிராமத்தில் மோண்டேஜ் கோரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான உர கிடங்கு உள்ளது.
அதேபோல் இந்நிறுவனம் கத்திவாக்கம் கிராமத்தில் அம்மோனியா சேமிப்பு கிடங்கும் வைத்துள்ளது. இந்த ஆலைக்கு கடற்கரையில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவு வரை கடலில் குழாய் பதிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் கப்பல்களில் கொண்டு வரப்படும் திரவ அம்மோனியா ரசாயனம் கொண்டு செல்லப்படுகிறது. 500 மீட்டர் ஆழத்தில் உள்ள இந்தக் குழாவில் நேற்று நள்ளிரவு கசிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் பர்மா நகர், நேதாஜி நகர், பெரிய குப்பம் மற்றும் சின்ன குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள சில மக்கள் மயங்கி விழுந்தனர்.
மேலும், இந்தப் பாதிப்பு காரணமாக மக்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம் புகுந்தனர். எனினும் மூச்சுத் திணறல் காரணமாக 30க்கும் மேற்பட்டவர்கள் மயக்கம் அடைந்துள்ளனர்.
2 பேருக்கு தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில், எண்ணூர் கோரமண்டல் ஆலையால் ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவு தொடர்பாக தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிக்க தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் முடிவு செய்துள்ளது.
இந்த வழக்கு, விடுமுறை முடிந்து ஜனவரி 2ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்குப் பட்டியலிடப்பட உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“