பாக பிரிவினை வழக்கு.. பெண்ணை அவமதிக்கும் வகையில் குறுக்கு விசாரணை.. உயர் நீதிமன்றம் மன்னிப்பு

உரிமைக்காக நீதிமன்றத்தை நாடும் பெண்களின் நடத்தையை படுகொலை செய்யும் வகையில் கேள்விகள் இருக்கக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

உரிமைக்காக நீதிமன்றத்தை நாடும் பெண்களின் நடத்தையை படுகொலை செய்யும் வகையில் கேள்விகள் இருக்கக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
insulting the woman during cross-examination in the partition case

சென்னை உயர் நீதிமன்றம்

பாக பிரிவினை வழக்கில் பெண்ணை அவமதிக்கும் வகையில் வழக்குரைஞர் எழுப்பிய கேள்வி அமைந்த நிலையில், உயர் நீதிமன்றம் மன்னிப்பு கோரியுள்ளது.

Advertisment

தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தில் பாக பிரிவினை வழக்கு ஒன்று நடந்துவந்தது. இந்த வழக்கு குறுக்கு விசாரணையின்போது, 2ஆவது மனைவியின் மகன் தரப்பு வழக்குரைஞர் எழுப்பிய கேள்வி தாயை அவமதிக்கும் வகையில் அமைந்துவிட்டது.

இது தொடர்பான மனுவின் மேல்முறையீடு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரதசக்கரவர்த்தி மன்னிப்பு கோரினார்.

தொடர்ந்து குறுக்கு விசாரணை என்பது, “மனுதாரர்களை அவமானப்படுத்தவோ, காயத்தை ஏற்படுத்தவோ இல்லை. தங்களின் உரிமைக்காக நீதிமன்றத்தை நாடும் பெண்களின் நடத்தையை அவமதிக்கும் வகையில் குறுக்கு விசாரணை கேள்விகள் இருத்தல் கூடாது” எனவும் தெரிவித்தார்.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: