Advertisment

காவல் ஆய்வாளருக்கு சம்பள பாக்கி: டிஜிபி சைலேந்திர பாபு மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி

காவல் ஆய்வாளரின் சம்பள பாக்கி விவகாரத்தில் டிஜிபி சைலேந்திர பாபு மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
The High Court has expressed displeasure against the DGP in the matter of arrears of police inspectors salary

Madras high court

காவல் ஆய்வாளராக பணியாற்றிய ரஞ்சித் என்பவர் 2019ஆம் ஆண்டு தனக்கு 2 மாதங்கள் ஊதியம் தரப்படவில்லை. அந்த ஊதியம் நிலுவையில் உள்ளது.

நிலுவையில் உள்ள ஊதியத்தை எனக்கு தர உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

Advertisment

வழக்கை விசாரித்த நீதிபதிகள், டிஜிபி சைலேந்திர பாபு கடமை தவறியுள்ளார் என அதிருப்தி தெரிவித்தனர். தொடர்ந்து, “நாட்டில் அதிகாரிகளின் செயல்பாடு எப்படி உள்ளது என்பதற்கு இந்த வழக்கு ஓர் உதாரணம். கடமை தவறிய டிஜிபியின் செயல் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது.

அவர், சம்பள பாக்கி கோரிய காவல் ஆய்வாளரின் விண்ணப்பத்தினை பரிசீலிக்காமல் தவறியுள்ளார். இந்த வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதன்படி, டிஜிபி ஒரு வாரத்தில் மனுதாரரின் கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sylendra Babu High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment