New Update
00:00
/ 00:00
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன் என்ற தலைப்பில் திமுக விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது.
இந்த விளம்பரங்களுக்கு அற்ப காரணங்களை கூறி தேர்தல் ஆணையம் அனுமதி மறுக்கிறது. தேர்தல் விளம்பரங்களுக்கு அனைத்து கட்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் முன் அனுமதி பெற வேண்டும் என்பது விதி.
இந்த விளம்பரங்களுக்கு தேர்தல் ஆணையம் 2 நாள்களில் அனுமதி வழங்க வேண்டும். ஆனால் திமுக விளம்பரங்களுக்கு 6 நாள்கள் வரை காலதாமதம் செய்யப்படுகிறது. ஆனால் இரண்டு நாள்களில் இந்த விளம்பரங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். ஆகவே திமுக தேர்தல் விளம்பரங்களை நிராகரித்த தேர்தல் அதிகாரிகளின் உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கேபிள் டிவி ஒழுங்குமுறை விதிகளின்படி தேர்தல் விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதை எதிர்த்து ஆந்திரா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. உச்ச நீதிமன்றம், விளம்பரங்களுக்கு அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர முடியும்” எனக் கூறினார்.
அப்போது நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு நகல் எங்கே என கேள்வியெழுப்பினர். தொடர்ந்து வழக்கின் விசாரணையை ஏப்.18ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.