அ.தி.மு.க.வில் ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இடையே பிளவு ஏற்பட்டது. தொடர்ந்து இருவரும் எதிரெதிர் துருவங்களாக செயல்பட தொடங்கினர்.
இந்நிலையில் 2022ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அப்போது இடைத் தேர்தலில் சின்னம் முடங்கிவிடக் கூடாது என்பதற்காக இடைக்கால தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டது.
அதன்படி ஓ.பன்னீர் செல்வம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் தனது வேட்பாளரை வாபஸ் வாங்கினார். இந்த நிலையில் 2022 பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் மனோஜ் பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கின் விசாரணை இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் வழக்கில் தீர்ப்பு நாளை வழங்கப்பட உள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பளிக்க உள்ளார்.
அ.தி.மு.க. பொதுக்குழு மீதான வழக்கில் நாளை தீர்ப்பளிக்க உள்ள நிலையில் அக்கட்சியினர் இடையே பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“