தி இந்து ஆங்கில நாளிதழின் சினிமா பிரிவில் செய்தியாளராக பணியாற்றி வந்த சென்னையை சேர்ந்த பிரதீப் குமார் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அவருக்கு வயது 29.
கடந்த 10ஆம் தேதி அவருக்கும் அவரது 61வயது அம்மாவிற்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, சென்னையில் உள்ள ஒரு கோவிட் சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.
அங்கும் பிரதீப் தன் பணியை தொடர்ந்தார். அந்த சிகிச்சை மையத்தின் மோசமான நிலைமை, சுத்தம் செய்யப்படாத கழிவறைகள், சுகாதாரமற்ற உணவு போன்றவற்றை தெரியப்படுத்தினார்.
பிரதீப்பின் சமூக வலைதளப்பக்கத்தை பார்த்த பிரதீப்பின் சென்னை கார்ப்பரேஷனின் துணை ஆணையர் மேகநாத் ரெட்டி, இந்த பிரச்சினையை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து, பின்னர் சுத்தம் செய்யப்பட்ட சிகிச்சை மையத்தின் படங்களை பகிர்ந்து கொண்டார்.
சிகிச்சை மையத்திலிருந்து வீடு திரும்பிய பிறகு இரண்டு நாட்களில் அவர்களது உடல்நிலை மோசமானது. இதையடுத்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனா சிகிச்சை மையங்களின் சுகாதாரமான சூழல் மற்றும் தரமான சிகிச்சையின் அவசியத்தை பிரதீப் எடுத்துரைத்துள்ளார்.
கேரளாவில் உள்ள கோவிட் சிகிச்சை மையங்களின் புகைப்படங்களை பார்க்கிறோம். அந்த அளவிற்கு தரங்களை எதிர்பார்க்கவில்லை. ஆனால் குறைந்தது நோயாளிகள் குணமடைந்து வரும் ஒவ்வொரு நொடியும் வருத்தப்படும் சூழலை மாற்ற வேண்டும் என்றார்.
இந்து மெட்ரோபிளஸ் குழுவினர் கூறுகையில், பிரதீப் ஒவ்வொரு முறையும் சுவாரஸ்யமான புதிய ஐடியாக்களுடன் அலுவலகத்திற்கு வந்து பகிர்ந்து கொள்வார்.அவர் சக பத்திரிகையாளர்களுடன், அவர் நேர்காணல் செய்தவர்களுடனும் அன்பாக நடந்து கொள்வார் என கூறியுள்ளனர்.
பிரததீப் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிலும் வேலை செய்துள்ளார்.
பிரதீப் மறைவிற்கு பத்திரிக்கையாளர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து அவரது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"