தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரத்தில் ஜூன் 19 மற்றும் ஜூன் 20 ஆகிய தேதிகளில் கள்ளச்சாராயம் அருந்தியதாகக் கூறப்படும் குறைந்தது 38 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மரணம் தற்போது 59 ஆக அதிகரித்துள்ளது.
இதில், பலியானவர்களில் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளியும் அடங்குவர். மேலும், 50க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சோகத்தை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு மாவட்ட ஆட்சியர் ஸ்ரவன் குமார் ஜாதவத்தை இடமாற்றம் செய்தது. மேலும், காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனாவை இடைநீக்கம் செய்துள்ளது.
மேலும், இந்த துயர சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் மற்றும் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ₹50,000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“