Advertisment

செந்தில் பாலாஜியை வளைக்கும் ஐ.டி: கரூரில் இதுவரை சிக்கியவர்கள் யார், யார்?

வருமான வரித்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியின் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் 6ஆவது நாளாக சோதனையை தொடர்ந்தனர்.

author-image
WebDesk
May 31, 2023 19:02 IST
The income tax department raided the houses of Senthil Balajis relatives for the 6th day

Raid (File Picture)

மதுவிலக்கு மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் 6ஆவது நாளாக சோதனை நடத்திவருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில் கரூரில் உள்ள அரசு ஒப்பந்ததாரரான சங்கரின் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டு அவரின் அலுவலகம் சீல் வைக்கப்பட்டது.

அதேபோல் சங்கர் அலுவலகத்தின் கணக்கர் ஷோபனாவிடம் அமலாக்கத்துறை அலுவலர்கள் விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து அவரை அதிகாரிகள் காரில் அழைத்துச் சென்றனர்.

இதற்கிடையில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குக்கு சொந்தமான டெக்ஸ்டைல் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

இதுமட்டுமின்றி செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான குவாரி உரிமையாளர்கள் அலுவலகங்களிலும் சோதனை தொடர்கிறது.

முன்னதாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு சென்றபோது திமுகவினரால் தாக்கப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#It Raid #V Senthil Balaji
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment