தமிழ்நாடு, புதுச்சேரியில் வெப்ப அலைகள் ஏப்.18,19 ஆகிய தினங்களில் வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “மேற்கு வங்கம், சிக்கிம், இமயமலை அடிவாரப் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.
இமாச்சலப் பிரதேசம், விதர்பா ஆகிய இடங்களில் ஆலங்கட்டி மழை பொழியும்.
ஒடிசா, வடக்கு கொங்கன், குஜராத் சௌராஷ்டிரா, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலப் பகுதிகளில் வெப்ப அலைகள் வீசக்கூடும்.
மேலும் ஜம்மு காஷ்மீர், லடாக், கில்கிட் பலுசிஸ்தான் ஆகிய பகுதிகளில் இடியும் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் ஏப்.18-19ஆகிய தேதிகளில் ஆலங்கட்டி மழை பெய்யக் கூடும். ஹரியானா- சண்டிகர், டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் ஏப்.18-19ஆகிய தேதிகளில் 25-35 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
எனினும் மேற்கு உத்தரப் பிரதேசம், கிழக்கு ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் 19ஆம் தேதியும், மேற்கு ராஜஸ்தானில் ஏப்.18-19 ஆகிய தேதிகளிலும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
அதேபோல் மத்திய மகாராஷ்டிரா, மராத்வாடா ஆகிய பகுதிகளில் ஏப்.18-19ஆகிய தேதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டில் வெப்பம் அலை
கேரளம், தமிழ்நாடு, மாகி, ஆந்திரப் பிரதேசம், புதுச்சேரி, காரைக்கால், ஏமன், ராயல்சீமா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளில் ஏப்.18-19ஆகிய தேதிகளில் வெப்ப அலைகள் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“