சென்னை ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் 250 ஆண்டுகள் பழமையான ரத்தின விநாயகர், துர்க்கை அம்மன் கோவில்கள் உள்ளன.
இந்தக் கோவில்களை சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்காக இடிக்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை எதிர்த்து இந்து அமைப்பினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கின் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், மூத்த வழக்கறிஞர்கள் எஸ்.ரவி, ராகவாச்சாரி ஆகியோர், ரத்தின விநாயகர் கோயிலை நேரில் பார்வையிட்டனர்.
அப்போது, பக்தர்களை உள்ளே விடாமல் போலீஸார் தடுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. மேலும் அங்கிருந்தவர்கள் தங்களின் பேச்சையும் கேட்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
மேலும், 250 ஆண்டுகள் பழமையான ரத்தின விநாயகர், துர்க்கை அம்மன் கோவில்களை இடிக்க கூடாது என்றும் வலியுறுத்தினார்கள்.
முன்னதாக இந்த விவகாரத்தில்,
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“