தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையின்போது, லஞ்ச ஒழிப்புத் துறை புலன் விசாரணை அதிகாரி பூமிநாதன் ஆஜரானார்.
அப்போது, 2016ஆம் ஆண்டு தங்கம் தென்னரசுவை விடுவிக்கக் கோரிய மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக் கூறிவிட்டு 2021ஆம் ஆண்டுக்கு பின் விசாரணைக்கு உகந்ததாக தோன்றியது ஏன் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வியெழுப்பினார்.
இதற்குப் பதில் அளித்த விசாரணை அதிகாரி பூமிநாதன், இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வாதத்தின் அடிப்படையில் மேல் விசாரணை கோரப்பட்டதாக தெரிவித்தார்.
இந்த வழக்கு, மார்ச் 8ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சில கேள்விகளை எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“