Advertisment

சிறுவாணி குறுக்கே கேரளா தடுப்பணை; கோவையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டி வருவதால் கோவையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
The Kerala government is building a barrage across the Siruvani River in Coimbatore

கோவை சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது.

கோவை மாநகர பகுதிகளின் குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை மற்றும் பவானி அணைகள் இருந்து வருகின்றன. கேரள மாநிலத்திற்கு உட்பட்ட முத்திக்குளம் பகுதியில் உருவாகும் சிறுவாணி ஆறு, கூடுதுறை என்ற இடத்தில் பவானி ஆற்றில் இணைகிறது.

Advertisment

இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையும், கோவை மாவட்டம் காரமடை அருகேயுள்ள பில்லூர் அணையும் கோவையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன‌.

இதனிடையே பவானி ஆற்றின் குறுக்கே தமிழக விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் எதிர்ப்பையும் மீறி கேரள அரசு தடுப்பணைகளை கட்டியுள்ளது.

இந்த நிலையில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை தடுப்பணைகளை கட்டும் பணிகளை கேரள அரசு துவக்கியுள்ளது.

அட்டப்பாடி கூலிகடவு - சித்தூர் சாலையில் நெல்லிப்பதி என்ற இடத்தில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. ஆற்றை மறித்து கட்டப்பட்டு வரும் தடுப்பணை கட்டுமான பணிகள் 90 சதவீதம் அளவிற்கு முடிவடைந்துள்ளது.

மேலும் 2 இடங்களில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கோடை காலங்களில் பில்லூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைய வாய்ப்புள்ளது. இது தமிழ்நாடு விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சிறுவாணி மற்றும் பவானி ஆறுகள் காவிரி ஆற்றின் கிளை நதிகளாக இருந்து வருகிறது எனவும் இந்த ஆறுகளின் குறுக்கே எந்தவித கட்டுமான பணிகளை மேற்கொள்ளவும் காவிரி மேலாண்மை வாரியத்தில் அனுமதி பெற வேண்டும். ஆனால் கேரள அரசு எவ்வித அனுமதியும் பெறாமல் தடுப்பணைகளை கட்டி கட்டி வருவதாக கூறப்படும் நிலையில்

ஏற்கனவே பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்ட எதிர்ப்பு எழுந்ததால் அம்முயற்சியை கேரள அரசு கைவிட்ட நிலையில், பவானி ஆற்றின் குறுக்கே சில இடங்களில் தமிழக விவசாயிகள் மற்றும் அமைப்பினர் எதிர்ப்பையும் மீறி தடுப்பணைகளை சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டியது.

சிறுவாணி அணையில் கோடை காலங்களில் தண்ணீர் எடுத்து வந்த சுரங்கப்பாதையும் கேரள அரசு மூடி விட்டது. தற்போது சிறுவாணி ஆற்றின் குறுக்கேயும் தடுப்பணைகளை கட்டி வருகிறது எனவும் இதனால் கோடை காலங்களில் பில்லூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறையவும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

குறிப்பாக தமிழ்நாடு அரசு கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தடுப்பணைகள் கட்டுமான பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை தகவலாக வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் பி.ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment