New Update
/
chennai-high-court | திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், “தாம் சாதி, மதம் அற்றவர் என சான்றிதழ் கோரி திருப்பத்தூர் தாசில்தாரிடம் விண்ணப்பம் செய்திருந்தேன்.
இந்த மனு தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆகவே எனக்கு சாதி மதம் அற்றவர் சாதி சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “சாதி மதம் அற்றவர் என்ற சான்றிதழ் வழங்க தாசில்தாருக்கு அதிகாரம் இல்லை; பட்டியலில் உள்ள குறிப்பிட்ட சான்றிதழ்கள் வழங்க மட்டுமே அதிகாரம் உள்ளது” என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “மனுதாரரின் விருப்பத்தை பாராட்டுகிறேன்; எனினும் இதுபோன்ற சான்றிதழ்களை வழங்குவது கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் இடஒதுக்கீடு உள்ளிட்டவைகளில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.
ஆகவே அரசின் உத்தரவுபடி அந்த இடத்தை பூர்த்தி செய்யாமல் அப்படியே விட்டு விடலாம். அதற்கான உரிமை உள்ளது. இதனை அரசு அதிகாரிகள் கேள்வி கேட்க முடியாது” என்றார்.
தொடர்ந்து, “சாதி மதம் அற்றவர் என்ற சான்றிதழ் வழங்க வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் கொடுக்கப்படாத நிலையில் அவ்வாறு உத்தரவிட முடியாது” என நீதிபதி தீர்ப்பளித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.