425 vacancies in Anna University: அண்ணா பல்கலைக்கழகத்தில் உறுப்பு கல்லூரிகள் செயல்படுகின்றன. இதில் மாதம் ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் ஒப்பந்த ஆசிரியர்கள் 2010-11ஆம் ஆண்டுகளில் பணி செய்தனர்.
இவர்கள் தங்களை பணி நிரந்தம் செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தனர்.
இந்த மனு இன்று நீதிபதிகள் ஆர். சுரேஷ் குமார், கே குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையின்போது, “ஏஐசிடிஇ விதிப்படி உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர் என 1745 ஆசிரியர்கள் இருக்க வேண்டும்” என்றும் “981 பணியிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது” என்றும் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், “425 இடங்கள் காலியாக உள்ளன” என்ற தகவலும் தெரிவிக்கப்பட்டது. அதாவது, “ஒதுக்கப்பட்ட இடங்களில் 556 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்” எனக் கூறப்பட்டது.
காலி பணியிடங்கள் தொடர்பாக வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அதனை நிரப்புவதில் சிக்கல் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனை கேட்ட நீதிபதிகள், 'காலியிடங்களை நிரப்ப வேண்டுமென்ற உயர் நீதிமன்ற உத்தரவை 3 ஆண்டுகளாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்காதது ஏன்” எனக் கேள்வியெழுப்பினார்கள்.
மேலும், “425 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் எப்படி செயல்படுகிறது” எனத் தெரிவித்த நீதிபதிகள் வழக்கை அக்டோபர் 5ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“