/tamil-ie/media/media_files/uploads/2017/06/kamaraj.jpg)
நன்னிலம் எம்.எல்.ஏ. காமராஜ் மீது ஏற்கனவே சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளது.
முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான ஊழல் புகாரில் எடுத்த நடவடிக்கைகள் என்ன? விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அ.தி.மு.க மூத்தத் தலைவரும் முன்னாள் அமைச்சரும் நன்னிலம் எம்.எல்.ஏ.வுமான காமராஜ் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் குவித்தது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் பொதுவிநியோக திட்டத்தின்கீழ் அரிசி, பருப்பு வாங்கியதில் ரூ.350 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த வேண்டும் என புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (நவ.1) விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? லஞ்ச ஒழிப்பு போலீசார் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஏற்கனவே பல்வேறு புகார்கள் உள்ளன.
இந்த நிலையில் இவர் மீதான ரூ.127 கோடி சொத்துக் குவிப்பு வழக்கில் திருவாரூர் தனிப்பிரிவு விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகம் வழக்குப்பதிவு செய்து 810 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இதில் காமராஜின் இரண்டு மகன்களின் பெயரும் இடம்பெற்றுள்ளன. மேலும், “ஆர்.சந்திரசேகரன், 63, பி.கிருஷ்ணமூர்த்தி, 52, எஸ்.உதயகுமார், 61. ஆகியோரின் பெயர்களும் உள்ளன.
இது குறித்து நடந்த விசாரணையில், முன்னாள் அமைச்சர் காமராஜ், நார்க் ஹோட்டல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பங்குகளை வாங்கி, தஞ்சாவூரில் உள்ள நார்க் ஹோட்டல் பிரைவேட் லிமிடெட் பெயரில் தனது நெருங்கிய கூட்டாளிகள் மூலம் சொத்துக்கள் வாங்கி பல வீடுகளை கட்டியது விசாரணையில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.