madras-high-court | udhayanidhi-stalin | Sanatana | சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு நடந்தது. இதில் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி, “சனாதனத்தை புரிந்துகொள்ள உதயநிதி என்ன ஆராய்ச்சி செய்தார்? எனக் கேள்வியெழுப்பினார்.
மேலும், சனாதன ஒழிப்பு மாநாட்டில் உதயநிதி நிகழ்த்திய உரையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து, “பனாரஸ் இந்து பல்கலைகழகம் பிரசுரித்த உரையையும் தாக்கல் செய்ய வேண்டும்” எனக் கூறினார். இந்த வழக்கு விசாரணையின்போது உதயநிதி தரப்பில் திமுக எம்.பி.யும், வழக்குரைஞருமான பி. வில்சன் வாதிட்டார்.
அப்போது, “அம்பேத்கர் நிகழ்த்திய உரைகளின் அடிப்படையில் உதயநிதியின் பேச்சு இருந்தது. சாதிய அமைப்புகள் உருவாக காரணமாக இருந்த வர்ணாசிரம தர்மத்தை ஒழிக்கவே உதயநிதி இவ்வாறு பேசினார் என்றார்.
தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்த அரசியல் அமைப்புகள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாகவும் உதயநிதி தரப்பில் பி வில்சன் குற்றஞ்சாட்டினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“