தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தை லஞ்ச ஒழிப்புத்துறை வரம்புக்குள் கொண்டுவந்தது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
நீதிமன்றம் தனது தீர்ப்பில், “ஊழல் தடுப்புச் பிரிவின்படி தேர்வு ஆணைய ஊழியர்கள், தலைவர், உறுப்பினர்கள் ஆகியோர் அரசு ஊழியர்கள் ஆவார்கள்.
ஆகையால், இவர்களை ஊழல் தடுப்பு சட்டப்பிரிவுக்குள் கொண்டுவந்தது தன்னிச்சையானது எனக் கூற முடியாது. சம்பந்தப்பட்ட திருத்தம் செல்லும்” என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும், டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய விதிகளில் திருத்தம் கொண்டுவர ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
தொடர்ந்து இந்த விவகாரத்தில் உறுப்பினர்களின் உரிமைகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறை வரம்புக்குள் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தை கொண்டுவரும் வகையில் 2011ஆம் ஆண்டு திருத்தம் கொண்டுவரப்பட்டது.
இந்தத் திருத்தத்துக்கு எதிராக ஊழியர்கள் சென்ன்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் இன்று (ஜன.5,2024) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“