அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது தேர்தல் வழக்கு 2021ஆம் ஆண்டு தொடரப்பட்டது. அதாவது, தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த கிலானி என்பவர் தனிநபர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் பிரமாண பத்திரத்தில் தவறான தகவல்களை அளித்துள்ளார் எனக் கூறியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டில் எடப்பாடி பழனிசாமி மீது விசாரணைக்கு உத்தரவிடப்படவில்லை. மேலும், எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு தடை வாங்கியிருந்தார்.
இந்த நிலையில் சேலம் மாவட்டம் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் புஷ்பராணி மற்றும் குணசேகர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தான் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் இந்தியன் வங்கி மற்றும் தான் படித்த பள்ளி, கல்லூரிகளில் விசாரணை நடத்தினார்கள் எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“