Advertisment

சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் கட்சி தலைமைதான் பொறுப்பு: பா.ம.க பொதுக்கூட்டமும், உயர் நீதிமன்ற உத்தரவும்!

பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்கூட்டத்தை கடலூர் மாவட்டத்தில் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
The Madras High Court refused permission to hold a public meeting of the PMK in Cuddalore

கடலூரில் உள்ள என்எல்சிக்கு எதிரான போராட்டத்தில் அன்புமணி ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியின் 35ஆவது ஆண்டு விழா அக்கட்சி தொண்டர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டுவரும் நிலையில், கடலூர் மாவட்டத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது.

இதற்கு காவல்துறை தரப்பில் அனுமதி அளிக்கவில்லை. இதனால், பாமக வழக்குரைஞர் பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வேண்டி மனுத்தாக்கல் செய்தார்.

Advertisment

இந்த மனு செவ்வாய்க்கிழமை (ஆக.29) விசாரணைக்கு வந்தது. அப்போது, “பொதுக்கூட்டம் நடத்த சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணமாக காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் காவல் துறை தரப்பினரின் கருத்துகளை கேட்ட நீதிபதிகள் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுத்துவிட்டனர். தொடர்ந்து, “பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுக்க முடியாது. எனினும் கடலூரில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க முடியாது.

பொதுக்கூட்டத்தை விழுப்புரம் அல்லது கள்ளக்குறிச்சியில் வைத்துக் கொள்ளலாம். ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் அதற்கு தலைமைதான் பொறுப்பேற்க வேண்டும்” என்றனர்.

இது தொடர்பாக பேசிய பாமக வழக்குரைஞர் பாலு, “நாங்கள் கடலூரில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். வேறு மாவட்டத்தில் நடத்த திட்டமிடவில்லை.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வோம்” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai High Court Chennai Pmk Anbumani Ramadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment