Ev Velu | Tiruvannamalai | Madras High Court | திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாத்தூரில் சரஸ்வதி அம்மாள் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான என்ஜினீயரிங் கல்லூரி ஒன்று உள்ளது.
இந்தக் கல்லூரியின் தலைவராக அமைச்சர் எ.வ.வேலுவின் மனைவி ஜீவா இருந்துவருகிறார். இந்த நிலையில், “இக்கல்லூரியானது அரசு புறம்போக்கு நிலம் மற்றும் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது; ஆகவே அதன் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்” என டி.எஸ். சங்கர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஜெ.சத்தியநாராயண பிரசாத் அமர்வில் செவ்வாய்க்கிழமை (ஏப்.23,2024) அன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமைச்சர் எ.வ வேலு தரப்பில் வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி வாதிட்டார். தனது வாதத்தின்போது, கல்லூரியானது அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டப்படவில்லை” என்றார்.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், கல்லூரி 20 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட வேண்டும் என விதி மீறப்பட்டுள்ளது.
கல்லூரியானது 7 ஏக்கர் நிலத்தில்தான் கட்டப்பட்டுள்ளது என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி, “இந்த விவகாரத்தில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் ( AICTE) தான் நடவடிக்கை எடுக்க முடியும்” எனக் கூறி வழக்கை முடித்துவைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“