/tamil-ie/media/media_files/uploads/2023/05/Mauritian-Presidential-couple1.jpg)
கன்னியாகுமரியில் மொரிசியஸ் ஜனாதிபதி தம்பதி
மொரிசியஸ் நாட்டின் ஜனாதிபதி பிருத்விராஜ் சிங் ரூபா (Prithvirajsing Roopun) தனது மனைவியுடன் மே 17ஆம் தேதி கன்னியாகுமரி வந்தார். அவருக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
தொடர்ந்து, மொரிசியஸ் ஜனாதிபதியும் அவரது மனைவியரும் கோவளம் மீனவ கிராமம் பகுதியில் நின்று சூரிய அஸ்தமனம் காட்சியை கண்டு மகிழ்ந்தனர்.
முன்னதாக இவர்கள் பகவதி அம்மன் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் கன்னியாகுமரி பெயரின் காரணம், பகவதி அம்மனின் கோவில் கொடிமர வரலாறு உள்ளிட்டவற்றை கோவில் நிர்வாகிகள் எடுத்துக் கூறினர்.
தொடர்ந்து, வியாழக்கிழமை (மே 18) காலை காலை சூரிய உதயத்தையும் கண்டு களித்தனர். பின்னர், சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் திருவள்ளுவர் சிலையை கண்டு ரசித்தனர்.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.