Advertisment

மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெறும் நாள்கள் எத்தனை? நாளை ஆய்வுக் கூட்டம்

ஜூன் 24ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இந்த நிலையில், ஜூன் 12ம் தேதி தமிழக சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.

author-image
WebDesk
New Update
Secretariat II

தமிழக சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஜூன் 24ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இந்த நிலையில், ஜூன் 12ம் தேதி தமிழக சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. முன்னதாக, தமிழ்நாடு சபாநாயகர் மு. அப்பாவு ஜூ்ன் 7ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

Advertisment

அப்போது, தமிழ்நாடு சட்டப்பேரவை ஜூன் 24ஆம் தேதி கூடுகிறது” என்று அறிவித்தார். தொடர்ந்து, ஜூன் 24ஆம் தேதி காலை 10 மணிக்கு துறைரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதக் கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடரை எத்தனை நாள்கள் நடத்துவது என்பது குறித்தும் எந்தெந்த நாள்களில் எந்தெந்த துறைகள் மீதான விவாதம் நடைபெறும் என்பது குறித்தும் அலுவல் ஆய்வுக் குழு முடிவெடுக்கும்” என்றார்.

2024ஆம் ஆண்டில் சட்டப்பேரவை முதல் கூட்டத் தொடர், பிப்ரவரி 12ஆம் தேதி கவர்னர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கியது. அப்போது, பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மற்றும் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

அதாவது பிப்.19ஆம் தேதி பொதுபட்ஜெட்டும், பிப்ரவரி 20ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. தெடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் பிப்.22ஆம் தேதி நடைபெற்றது.

இந்த நிலையில், ஜூன் 12ம் தேதி தமிழக சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், துறை ரீதியான மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறும் நாள்கள் குறித்து முடிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

appavu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment