Advertisment

திருவெறும்பூர் சூரியூரில் சிப்காட் தொழில்பேட்டை: அமைச்சர் டி.ஆர்.பி ராஜா

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகில் உள்ள சூரியூரில் சிப்காட் தொழில்பேட்டை அமைக்கப்படும் என அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கூறினார். இதன் மூலம்..

author-image
WebDesk
New Update
The minister TRB Raja said that an industrial park will be set up at Suriur in Tiruverumpur

திருவெறும்பூர் சூரியூரில் தொழில்பேட்டை அமைக்கப்படும் என அமைச்சர் கூறினார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு தொகுப்புகளை தயாரித்து வெளியிடுதல், டிவிட்டர் தொடங்குதல், 100 இளைஞர்களுக்கு வலைதள வசதியுடன் கூடிய கைப்பேசி வழங்கும் நிகழ்ச்சி, தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ருணாநிதி தலைமையில் இன்று நடந்தது.

Advertisment

மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் குட்டிமணி, தமிழரசன் ஆகியோர் வரவேற்றனர். விழாவில் அன்பில் அமைச்சரும், தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, கழக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் திண்டுக்கல் லியோனி, திருச்சி மாநகர திமுக செயலாளர் மதிவாணன், திமுக தகவல் தொழில்நுட்ப அணி திருச்சி மண்டல பொறுப்பாளர் கேசவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் துணை மேயர் திவ்யா தனக்கோடி மற்றும் மாவட்ட, பகுதி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

முடிவில் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் மகாதேவன், முரளி கிருஷ்ணன், உமாராணி ஆகியோர் நன்றி கூறினர். முன்னதாக, திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே ஹெச் ஏ பி பி தொழிற்சாலைக்கு சொந்தமான 150 ஏக்கர் இடத்தை தமிழ்நாடு அரசு பெற்று அதனை சிப்காட் தொழில் பூங்கா அமைப்பதற்கு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் அந்த இடத்தை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ், தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா இன்று நேரில் ஆய்வு செய்தனர்.

பின்னர், தமிழக தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது; தமிழக முதல்வர் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். டெல்டா பகுதியில் தொழில் வளர்ச்சி அதிகரிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளார். அதன் ஒரு பகுதியாக தற்பொழுது திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட சூரியூர் பகுதியில் சிப்காட் தொழில்பேட்டை அமைப்பது முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்த சுற்றுபட்ட பகுதியை சேர்ந்த படித்த இளைஞர்கள் அதிக அளவில் வேலை வாய்ப்பு பெருவார்கள். இதை அமைத்து தர வேண்டுமென தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பலமுறை வலியுறுத்தியதாகவும், மேலும், இந்த இடத்தில் ஹெச் ஏ பி பி தொழிற்சாலைக்கு சொந்தமான இடம் உள்ளது என்றும் அந்த இடத்தை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்  இதன் மூலம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு அதிகரிக்க வேண்டும் என்று கூறியதை தொடர்ந்து அதிரடியாக அதற்குரிய பணியை தொடங்க சொன்னதாகவும் இந்த நிலையில் கலெக்டர் வரலாறு காணாத வேகத்தில் விரைவாக150 ஏக்கர் பரப்பளவு ஆரம்பிப்பதற்கு தமிழக முதல்வர் அறிவிப்பதோடு இல்லாமல் பணியை விரைந்து தொடங்க வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த பணி இன்றே தொடங்கிவிட்டது.

மேலும், இந்த பகுதியில் உள்ள பெல் நிறுவனத்தைச் சுற்றி பெரிய தொழிற்சாலைகள் உள்ளது ஆனால் உற்பத்தி குறைவாக உள்ளது. இதனால் இந்த பிரச்சனை கடந்த ஆட்சி காலத்தில் இருந்தே உள்ளது. ஆனால்,  மாற்றான் தாய் மனப்போக்குடன் மத்திய அரசு செயல்படுவதாகவும் பெல்லுக்கு அதனால் தான் பெரிய ஆர்டரை பெற்று தரவில்லை.

தமிழக முதல்வர் டெல்டாக்காரன் ஆவார். மேலும், இதற்கு தேவையான அடிப்படை வசதிகளான சாலை உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

இந்த இடத்தில் புதிய செக்டார் நிறுவனம் கொண்டு வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது, அதை தற்பொழுது சொல்ல முடியாது. சிப்காட் வருவதன் மூலம் திருச்சி பெரிய அளவில் தொழில் வளர்ச்சி அடையும்,  போட்டிகள் பெரிய அளவில் உள்ளதால் அதை வெளியில் என்னால் கூற முடியாது. இங்கு இருப்பவர்களுக்கு தான் அதிகமான திறமைகள் உள்ளது.

அதற்கு காரணம் திராவிட மாடல் ஆட்சியில் படியுங்கள் அதிகம் எனக் கூறி வருகிறோம். இங்கு தொழில் நிறுவனம் தொடங்க வருபவர்கள் வளர்ச்சியால் போட்டி போட்டு வளர்கிறார்கள்.

கப்பல் துறைமுகம் இல்லாத இடத்தில் தொழிற்சாலை கொண்டு வருவது எவ்வளவு கடினம் என்பது எல்லோருக்கும் தெரியும் இங்கு தொழிற்சாலை கொண்டு வருவது சாதாரண விஷயம் இல்லை.

எனவே, இந்த பகுதியில் அமையும் தொழிற்சாலை இந்த பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் என்று கூறினார்.

இந்த நிகழ்வில் திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் மற்றும் அரசு அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனர்.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment