Coimbatore | கோவை மாவட்டம் காரமடை பெள்ளாதி ரோடு பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன் இவரது இரண்டாவது மகள் ரம்யா இவர் சென்னையில் தனது கணவர் வெங்கடேஷ் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் திருமுல்லை வாயிலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.
ஜ.டி ஊழியரான இருவரும் குடும்பத்துடன் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த தம்பதியினரின் ஏழு மாத கை குழந்தை அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து அருகில் தவறி விழுந்து தத்தளித்த நிலையில் அருகில் இருந்தவர்கள் போராடி பத்திரமாக மீட்டனர்.
இந்தச் சம்பவம் நடந்தது குறித்து சமூக வளைதளங்கான பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் பரவியது அதில் தாய் ரம்யா குறித்து கமென்ட்ஸ் பக்கத்தில் மிக மோசமான நிலையில் கருத்து தெரிவித்து பலரும் பகிர்ந்ததாக கூறப்படுகிறது.
மிகவும் அமைதியாக வாழ்க்கையில் இருந்த ரம்யாவுக்கு இந்த கருத்துக்கள் மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது இதற்காக அவர் சிகிச்சையும் எடுத்துள்ளார்.
இருப்பினும் அதில் இருந்த மீண்டு வராமல் மிகவும் மன அழுத்தம் ஏற்பட்டு ரம்யா மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சென்னையில் இருந்து ரம்யா தனது சொந்த ஊரான காரமடைக்கு தாய் வீட்டிற்கு கடந்த 15நாட்களுக்கு முன்பு கணவர் மற்றும் குழந்தைகளுடன் வந்துள்ளார்.
இங்கு தங்கி இருந்த நிலையில் நேற்று மாலை ரம்யாவின் தாய் தந்தை மற்றும் குடும்பத்தினர் ஒரு நிகழ்ச்சிக்கு வெளியே சென்ற நேரத்தில் மன அழுத்தத்தில் இருந்த ரம்யா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர் வெளியில் சென்றவர்கள் மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்து போது ரம்யா தூக்கிட்ட நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக வலைதளங்கள் என்பது ஆரோக்கிய விஷயத்தை பரிமாற கொள்ளத்தான் ஆனால் சமீபகாலமாக இந்த வளைதள பக்கங்களால் மாறுபட்ட கருத்துக்களால் தனிமனித வாழ்க்கை மிகவும் சீரழிக்கபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதற்கு உதாரணமாக மாறியுள்ளது ரம்யாவின் உயிரிழப்பு மிகவும் அமைதியாக வாழ்க்கையை வாழ்ந்து வந்த இந்த அழகிய குடும்பம் இன்று எதிர்மறையான கருத்துக்களால் சின்னாபின்னமாகி இரண்டு பிஞ்சுகளுக்கு தாய் பாசத்தை இழக்க செய்துள்ளது.
செய்தியாளர் பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“