/indian-express-tamil/media/media_files/dNtvzYuSZGPQM6B05bUt.jpg)
கோவை அருகே ஸ்விகியில் ஆடர் செய்த உணவை குழந்தைக்கு தரும் போது... ‘கூல் லிப்’ இருந்ததைப் பார்த்து தாய் அதிர்ச்சி
கோவை அருகே ஸ்விக்கியில் ஆடர் செய்த உணவை குழந்தைக்கு தரும் போது அதில் தடைசெய்யப்பட்ட கூல் லிப் இருந்ததால் தாய் அதிர்ச்சி அடைந்தார்.
அந்த உணவை உண்ட குழந்தைக்கு வயிற்றுபோக்கு ஏற்படுள்ள நிலையில், உணவகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தையின் தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜாஸ்மின். இவர் தனது வீட்டில் சிலிண்டர் காலியானதால், குழந்தைக்கு உணவு தர இணையத்தில் ஆர்டர் செய்திருக்கின்றார்.
ஜாஸ்மின் குழந்தைக்கு சைவ உணவு தர வேண்டும் என்பதனால், சாய்பாபா காலனி பகுதியில் உள்ள பிரபலமான சைவ உணவகத்தில் பிரபல உணவகமான
ஸ்விக்கியில் ஆர்டர் செய்திருக்கின்றார்.
அப்பொழுது காம்போ ஆஃபரில் தயிர் சாதம், சாம்பார் சாதம், காம்போ மீல் மற்றும் பேபி கார்ன், பெப்பர் ஃப்ரை உணவுகளை ஆர்டர் செய்திருக்கின்றார்.
ஜாஸ்மின், உணவு ஸ்விக்கி உணவு விநியோகம் செய்பவர் மூலம் உணவை பெற்று இருக்கின்றார். உணவு டெலிவரி செய்யும் பொழுது அதிலிருந்த பார்சல் பிரித்திருந்திருந்த்தாக கூறியிள்ள ஜாஸ்மின், பசியுடன் இருந்த குழந்தைக்கு, அப்பொழுது அந்த உணவை ஊட்டினார்.
பேபி கார்னை குழந்தைக்கு ஊட்டியபோது, ஜாஸ்மின் கண்களுக்கு வித்தியாசமான ஒரு பொருள் உணவில் இருப்பது தெரிந்தது.
பஞ்சு அடைத்த பை போல அது இருந்த அந்த பொருளை உற்று பார்க்கையில், பாப்கானில் இருந்த அந்தப் பொருள், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களில் ஒன்றான கூல் லிப் என்பது தெரியவந்தது.
கூல் லிப் குட்கா உணவில் இருப்பதைப் பார்க்கும் முன்னர், குழந்தைக்கு பேபி கார்ன் உணவை ஜாஸ்மின் ஊட்டி இருக்கின்றார் . சிறிது நேரத்தில் குழந்தை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, வயிறு வலி உபாதையுடன் வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கிறது. இதுபோன்று உணவுகளை அலட்சியமாக விநியோகம் செய்யும் உணவகங்கள் மீது உணவு பாதுகாப்பு துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருக்கின்ற ஜாஸ்மின், தனக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் இனி இதுபோன்று அலட்சியங்கள் நிகழாத வண்ணம் உணவு பாதுகாப்பு துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தகவலாக தெரிவித்திருக்கின்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.