Advertisment

சிற்பி பாலசுப்ரமணியம், சௌகார் ஜானகி உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிப்பு

பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் பட்டியல் இங்கே

author-image
WebDesk
New Update
சிற்பி பாலசுப்ரமணியம், சௌகார் ஜானகி உட்பட  தமிழகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிப்பு

The Padma Shri awardees from Tamil Nadu this year: இந்திய அரசு அறிவித்துள்ள பத்மஸ்ரீ விருதுகளுக்கு தமிழகத்தைச் சேர்ந்த 7 சாதனையாளர்களும், புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர் பத்ம விபூஷண் மற்றும் 17 பேர் பத்ம பூஷன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆனால் இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை.

Advertisment

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து பத்மஸ்ரீ விருது பெற்றவர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

சிற்பி பாலசுப்ரமணியம் (இலக்கியம் மற்றும் கல்வி), எஸ் பல்லேஷ் பஜந்திரி (கலை), எஸ் தாமோதரன் (சமூகப்பணி), சௌகார் ஜானகி (கலை), ஆர் முத்துகண்ணம்மாள் (கலை), ஏகேசி நடராஜன் (கலை), டாக்டர் வீராசாமி சேஷியா (மருத்துவம்) தவில் கொங்கம்பட்டு ஏ.வி.முருகையன். (கலை)

சிற்பி பாலசுப்ரமணியம்

சிற்பி பாலசுப்ரமணியம் புகழ்பெற்ற தமிழ்க் கவிஞர், அறிஞர் மற்றும் இரண்டு முறை சாகித்ய அகாடமி வென்றவர். இவர் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றியவர். பாரதிதாசன் விருது, தமிழ்நாடு அரசு விருது உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். அவரது சிறந்த படைப்புகளில் சில சிறிதா முத்துக்கள், சூரிய நிழல், ஒரு கிராமத்து நதி போன்றவை அடங்கும். அவரது கவிதைகள் ஆங்கிலம், கன்னடம், இந்தி, மலையாளம், முதலிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

சௌகார் ஜானகி

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி தமிழ், கன்னடம், தெலுங்கு என 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் தனது ஆரம்ப காலத்திலிருந்தே ‘ஆகாசவாணி மெட்ராஸில்’ ஒரு முக்கிய வானொலி கலைஞராக இருந்தார். அவர் பல மேடை நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார் மற்றும் அவரது திரைப்பட வாழ்க்கை முழுவதும், அவர் ஒரு பல்துறை நடிகராக அறியப்பட்டார். ஜானகி 1950 இல் ‘சவுகாரு’ என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், அதைத் தொடர்ந்து அவருக்கு ‘சௌகார்’ என்ற பெயரும் கிடைத்தது. தமிழ் சினிமாவின் இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தரின் படங்களில்  அவரது நடிப்பு ரசிகர்களால் பரவலாக பாராட்டப்பட்டது. 1984 இல் பிலிம்பேர் (தெற்கு) வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றதோடு மட்டுமல்லாமல், அவர் பல விருதுகளையும் வென்றுள்ளார். 91 வயதிலும் தொடர்ந்து படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் சௌகார் ஜானகி.

ஆர் முத்துகண்ணம்மாள்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த கடைசி தேவதாசி சதிர் நடனக் கலைஞர்களில் முத்துகண்ணம்மாள் ஒருவர். சதிர், ஒரு பழங்கால நடன வடிவம். முத்துக்கண்ணம்மாள் விராலிமலை முருகன் கோவிலில் தெய்வத்தை சேவித்தாள். 2018 ஆம் ஆண்டில், தக்ஷிணசித்ரா விருது என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார், இது தக்ஷிணசித்ராவின் நண்பர்கள் நாட்டுப்புற கலைஞர்களை கௌரவிப்பதற்காக வழங்கப்படும் விருதாகும்.

ஏ.கே.சி.நடராஜன்

கிளாரினெட் எவரெஸ்ட் என்று போற்றப்படும் நடராஜன், 2008 ஆம் ஆண்டு மெட்ராஸ் மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருதைப் பெற்றவர். 1994 ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாடமி விருதையும் பெற்றார். தலைசிறந்த கலைஞராகக் கருதப்படும் நடராஜன், சென்னை மற்றும் பிற நகரங்களில் உள்ள பல்வேறு முன்னணி சபாக்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Padma Shri Awards
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment