Advertisment

உதயநிதிக்கு மிரட்டல்: விஷ்வ இந்து பரிஷத் பிரமுகர் கைது

“சனாதனம் என்பது மலேரியா, டெங்கு போன்றது. அதை எதிர்ப்பது அல்ல, ஒழிக்க வேண்டும் என்பதே நமது நோக்கம்” என சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

author-image
WebDesk
New Update
Udhayanidhi II

தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னையில் கடந்த வாரம் சனாதன ஒழிப்பு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டுக்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகனும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி கலந்துகொண்டார். மேலும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்த அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, உயர் கல்வி அமைச்சர் பொன்முடி, தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், விசிக தலைவர் தொல் திருமாவளவன், இடதுசாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Advertisment

இந்த விழாவில் பேசிய உதயநிதி, “சனாதனம் என்பது மலேரியா, டெங்கு போன்றது. அதை எதிர்ப்பது அல்ல, ஒழிக்க வேண்டும் என்பதே நமது நோக்கம்” என்றார்.
இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை D-டெங்கு M- மலேரியா K- கொசு என்று திமுகவை விமர்சித்தார்.

உத்தரப் பிரதேசத்தில் சாமியார் ஒருவரும் உதயநிதியின் தலைக்கு ரூ.10 கோடி அறிவித்தார். இதற்கு காமெடியாக பதிலளித்த உதயநிதி, “எனது தலையை சீவ ரூ.10 சீப்பு போதும், ரூ.10 கோடி தேவையில்லை” என்றார். தொடர்ந்து, உதயநிதிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையில் உதயநிதியின் தலைக்கு ரூ.1001 கோடி என சமூக வலைதளத்தில் விருதுநகரை சேர்ந்த கலையரசன் என்பவர் போஸ்ட் செய்திருந்தார்.
புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விசாரணையில் இவர் விஷ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் நிர்வாகி என்பது தெரியவந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Udhayanidhi Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment