விஜயகாந்து தன் மீது பிறப்பிக்கப்பட்டுள்ள பிடி வாரண்டை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் கடந்த 2013ம் ஆண்டு, தேமுதிக தலைவா் விஜயகாந்த் பத்திரிகையாளரை தாக்கியதான வழக்கு ஆலந்தூா் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணைக்கு விஜயகாந்த் தொடா்ந்து ஆஜராகாமல் இருந்துள்ளாா். மேலும் கடந்த நவம்பா் 14ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஆலந்தூர் மாஜிஸ்திரேட் டிசம்பா் 5ம் தேதி அன்று கண்டிப்பாக விஜயகாந்த் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டாா்.
ஆனால் விஜயகாந்த் ஆஜராகவில்லை, மேலும் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருப்பதாக அவா் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் மாஜிஸ்திரேட் அதை ஏற்க மறுத்து, விஜயகாந்திற்கு பிடிவாரணட் பிறப்பித்து உத்தரவிட்டாா்.
அதோடு வழக்கு விசாரணையை 2018ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
இந்நிலையில் விஜயகாந்து தன் மீது பிறப்பிக்கப்பட்டுள்ள பிடி வாரண்டை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கு விசாரணைக்கு பின்னர் விஜயகாந்த் மீதான பிடிவாரண்டை நீதிபதி ரத்து செய்தார்.