scorecardresearch

அரியலூரில் போலீஸ் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு.. கடும் நடவடிக்கை எடுக்க பா.ம.க. கோரிக்கை

இந்த சம்பவம் தொடர்பாக விக்கிரமங்கலம் போலீஸார் சந்தேக மரணம் (பிரிவு 174) என வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Ariyalur farmer killed in police attack
அரியலூர் விவசாயி செம்புலிங்கத்தின் மரணத்திற்கு நீதிக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பாமக.

தஞ்சை மாவட்டம் அணைக்குடி காலனி தெருவைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர், கடந்த நவ.24ஆம்தேதி அரியலூர் மாவட்டம் தா.பழூரை அடுத்த காசாங்கோட்டை கிராமத்தில் உள்ள தனது அக்கா மகள் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு உறவினர்களுடன் சீர்வரிசை எடுத்துச் சென்றுள்ளார்.

அப்போது, காசாங்கோட்டை மாரியம்மன் கோயிலில் இருந்து சீர்வரிசை எடுத்துச் செல்ல மற்றொரு சமூகத்தினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து புருஷோத்தமன் அளித்த புகாரின்பேரில், அருண்குமார் உட்பட 5 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் விக்கிரமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

அப்போது, காசாங்கோட்டை மாரியம்மன் கோயிலில் இருந்து சீர்வரிசை எடுத்துச் செல்ல மற்றொரு சமூகத்தினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து புருஷோத்தமன் அளித்த புகாரின்பேரில், அருண்குமார் உட்பட 5 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் விக்கிரமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்தபோது, போலீஸார் தன்னை தாக்கியதால்தான் காயமடைந்ததாக அரியலூர் போலீஸாரிடம் செம்புலிங்கம் வாக்குமூலம் அளித்துள்ளார். பின்னர், மேல்சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செம்புலிங்கம், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, செம்புலிங்கத்தைத் தாக்கிய போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு, அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அரசு மருத்துவமனை முன்பு அவரது உறவினர்கள் மற்றும் பாமக பிரமுகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதேபோல, செம்புலிங்கத்தைத் தாக்கிய போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரியலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு பாமக மாவட்டச் செயலாளர் காடுவெட்டி ரவிசங்கர் தலைமையில் பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த சம்பவம் தொடர்பாக விக்கிரமங்கலம் போலீஸார் சந்தேக மரணம் (பிரிவு 174) என வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இந்த நிலையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த மரணத்துக்கு காரணமான 8 காவலர்கள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும். செம்புலிங்கம் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

செய்தியாளர் க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: The pmk party members has alleged that the farmer died in the attack by the police