புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த லாவண்யா என்பவர் முனைவர் பட்டப்படிப்பு படித்துவருகிறார்.
இவருக்கும் அவரது காதலருக்கும் இடையே 6 மாதமாக சண்டை இருந்துள்ளது. இதனால் பேசாமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் லாவண்யாவுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ப்ளாக் மேஜிக் கும்பல் ஒன்று அறிமுகமாகி உள்ளது. அவர்கள் லாவண்யாவிடம் காதலரிடம் சேர்த்து வைப்பதாக கூறி ரூ.6 லட்சம் வரை மோசடி செய்துள்ளனர்.
இது குறித்து அவர் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.
இதற்கிடையில் இதுபோன்ற விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர்.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“