நடுரோட்டில் வாலிபர் மீது போலீசார் தாக்குதல் : மனித உரிமை ஆணையம் டிஜிபிக்கு நோட்டீஸ்

தமிழக மாநில மனித உரிமை ஆணையம், தமிழக டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், நடு ரோட்டில் வாலிபர் தாக்கப்பட்டது ஏன் என்று விளக்கம் தருமாறு கேட்டுள்ளது.

சென்னை தி.நகரில் நடுரோட்டில் வாலிபர் மீது போலீசார் நடத்திய தாக்குதல் குறித்து விளக்கம் தருமாறு மாநில மனித உரிமை ஆணையம், போலீஸ் டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

நேற்று முன் தினம் சாலிகிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ், தாய் சங்கீதா, தங்கையுடன் ஓரே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். தி.நகர் துரைசாமி சப்வே அருகில் வந்த போது போக்குவரத்து போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். அவர் ஹெல்மெட் போடவில்லை என்பதால் போலீசார் அது பற்றி கேட்க, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. உடன் அங்கு நின்று கொண்டிருந்த மேலும் சில போக்குவரத்து போலீசார், பிரகாஷை மடக்கிப் பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்தனர்.

பொது மக்கள் அதிகம் கூடும் தி.நகர் பகுதியில் போலீசார் வெட்ட வெளியில் வாலிபரை அடித்து நொறுக்குவதையும், வாலிபரின் தாயார் மகனை காப்பாற்ற முயல்வதும் வீடியோவாக சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட வாலிபர் பிரகாஷ், போலீசாரை தாக்கியதாக வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

வீடியோ வைரலானதைத் தொடர்ந்து உயர் அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் தமிழக மாநில மனித உரிமை ஆணையம், தமிழக டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், நடு ரோட்டில் வாலிபர் தாக்கப்பட்டது ஏன் என்று விளக்கம் தருமாறு கேட்டுள்ளது.

வாலிபர் பிரகாஷ் தாக்கப்பட்ட வீடியோ செய்தியை படிக்க…

×Close
×Close