2023 புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரி- தமிழக எல்லைப் பகுதியான மதகடிப்பட்டில் தமிழகத்திலிருந்து ஏராளமான மது பிரியர்கள் மது குடிப்பதற்காக சாலையிலேயே அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தனர்.
-
சாலைகளில் அமர்ந்து மது குடித்த மது பிரியர்கள்.. மதுக் கடைகளுக்கு அறிவுரை வழங்கிய போலீசார்
இந்த நிலையில், அப்பகுதிக்கு திருபுவனை சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் அப்பகுதிக்க வந்தனர். அவர்கள் அங்கு குடித்துக் கொண்டிருந்த அனைவரையும் அங்கிருந்து விரட்டி அடித்தனர்.
மேலும் அங்குள்ள அனைத்து மதுபான கடைகளுக்கும் சென்று சாலைக்கு இடையூறாக கடைக்கு எதிரே மது அருந்தினால் கடைக்காரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து, மதகடிப்பட்டு எல்லைப் பகுதியில் இருந்து மதகடிப்பட்டு கடை முழுவதும் போலீசார் அணிவகுப்பில் ஈடுபட்டனர். இதனால் மதகடிப்பட்டு கடைவீதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மது குடித்தோர் அங்குமிங்கமாக சிதறி ஓடினர்.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/