/tamil-ie/media/media_files/uploads/2023/07/Trichy-2.jpg)
திருச்சியில் முதியோர் பெட்டிசன் மேளா காவல் ஆணையர் சத்திய பிரியா தலைமையில் நடந்தது.
திருச்சி மாநகரத்தில் வசிக்கும் மூத்த குடிமக்களின் பிரச்சனைகளை தீர்க்க சிறப்பு மூத்தோர் குறைதீர்க்கும் பெட்டிசன் மேளா (Senior Citizen Petition Mela) திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா தலைமையில் இன்று (ஜூலை 14) நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநகர காவல் துறை ஆணையர் சத்யபிரியா, “வாரந்தோறும் புதன்கிழமை சிறப்பு முகாம்கள் நடத்தி புகார் மனுக்களை பெற்று வருகிறோம்.
இருந்த போதிலும் முதியோர்கள் வர முடியவில்லை, அவர்களை அழைத்து வருவதற்கு ஆட்கள் இல்லை, இதுபோல் அவர்களுக்கு சிறு சிறு பிரச்சனைகள் உள்ளது. ஆகையால் அவர்களுடைய பிரச்சினையை தீர்க்கும் வகையாக நேரடியாக அவர்களை சந்தித்து மனுக்களை பெறுவதற்காக இன்று இந்த சிறப்பு குறைதீர்க்கும் பெட்டிசன் மேளா நடத்தப்படுகிறது.
திருச்சி மாநகரைப் பொருத்தவரை கடந்த ஜனவரி மாதம் முதல் இந்நாள் வரை 2000 புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 1700 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.