scorecardresearch

கன்னியாகுமரி; மீன்பிடித் தொழிலில் 500 வட மாநில தொழிலாளர்கள்.. போலீசார் விழிப்புணர்வு

கன்னியாகுமரியில் 500க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் மீன்பிடி வேலை பார்த்து வருகின்றனர்.

The police created awareness among the workers of Kanyakumari North State
கன்னியாகுமரி வடமாநில தொழிலாளர்களிடம் போலீசார் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ஒரு சர்வதேச சுற்றுலா பகுதி என்பதால் ஏராளமான தங்கும் விடுதிகள், உணவகங்கள் உள்ளன.
இந்த இடங்களில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் பணிபுரிகின்றனர். மேலும், சின்னமுட்டம், குளச்சல், தேங்கபட்டணம், லைட் ஹவுஸ் முட்டத்தில் உள்ள ஜே.பி.ஆர் தனியார் துறைமுகத்திலும் வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர்.

இங்கு கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களிடம் ஏதேனும் அச்சுறுத்தல் உள்ளதா? என காவலர்கள் விசாரணை நடத்தினர்.
அப்போது வடமாநில தொழிலாளர்கள் தாங்கள் நலமுடன் இருப்பதாகவும், எந்தப் பிரச்னையும் இல்லையென தெரிவித்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் விழிப்புணர்வும், துண்டு பிரசுரமும் பாதுகாப்புக்காக தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களும் கொடுக்கப்பட்டன.
சமீபத்தில் தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்தப் புகாரை தொடர்ந்து, பீகார் குழு தமிழ்நாடு வந்தது நினைவு கூரத்தக்கது.

செய்தியாளர் த.இ. தாகூர்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: The police created awareness among the workers of kanyakumari north state