Ttv Dhinakaran | Theni | Lok Sabha Election | டி.டி.வி தினகரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெரியக்குளம் சட்டமன்ற தேர்தல் கண்காணிப்பு குழு தலைவர் நீதிநாதன் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேட்புமனு தாக்கலின்போது, அனுமதிக்கப்பட்ட வாகனங்களை விட அதிக எண்ணிக்கையிலான வாகனங்களில் சென்றது, பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
டி.டி.வி தினகரனின் அ.ம.மு.க, பா.ஜ.க கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. இந்த நிலையில் அக்கட்சியின் தலைவர் டி.டி.வி தினகரன் தேனி மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் தங்க தமிழ் செல்வன் போட்டியிடுகிறார். இதனால் இந்தத் தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெறும் தொகுதியாக மாறியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் ஏப்.19ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்குப்பதிவு முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி அறிவிக்கப்படுகின்றன.
நாடு முழுக்க மக்களவை தேர்தல் ஜூன் 1ஆம் தேதிவரை 7 கட்டங்களாக நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"