திருச்சி மாநகர ஆயுதப்படை திருமண மண்டபத்தில் செப்டம்பர் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் மாநகர காவல் ஆணையர் ந.காமினி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காவல் துணை ஆணையர்கள் ரவிசந்திரன், செல்வகுமார், தெற்கு காவல் கூடுதல் கண்காணிப்பாளர் ஆயுதப்படை, காவல் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், மாநகர காவல் ஆணையர் பேசுகையில்; பள்ளி கல்லூரிகளுக்கு அருகில் போதை மற்றும் புகையிலை பொருள்கள் விற்பனை ஏதும் நடைபெறா வண்ணம் தீவிரமாக கண்காணிப்பு செய்தும், ஸ்பா என்ற பெயரில் இளம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் குற்றவாளிகள் மீதும், அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்தும், குற்றச்சம்பங்கள் ஏதும் நடைபெறாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.
மேலும் சட்டம் ஒழுங்கை பேணிகாக்கவும், குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க ரோந்து பணிகளை அதிகப்படுத்தவும் காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மாதாந்திர ஆலோசனைக்கூட்டத்தில் திருச்சியில் உள்ள காவல்துறை உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள், க்ரைம் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“