சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசினார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பெட்ரோல் குண்டு வீசிய நபரை வளைத்துப் பிடித்தனர். பின்னர் அவரிடம் இருந்து 3 குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில் அந்த நபர் அவர் தேனாம்பேட்டையைச் சேர்ந்த கருக்கா வினோத் என்பது தெரியவந்தது. அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அவருக்கு 15 நாள்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், போலீசார் கருக்கா வினோத் தாயாரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது கருக்கா வினோத் யார் யாரை சந்தித்தார்? அவருக்கு யாருடன் எல்லாம் தொடர்புகள் உள்ளன? என்பன போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
இந்த நிலையில், “இந்தப் பிரச்னை மகனோடு (கருக்கா வினோத்) போகட்டும்; எங்களை வாழ விடுங்கள்” என அவரது தாயார் சாவித்திரி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் கவர்னர் மாளிகை புகாருக்கு தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆளுனர் மாளிகை புகார் தொடர்பாக அவர் அளித்துள்ள விளக்கத்தில் இது உண்மைக்கு புறம்பானது எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“