80 வயதுக்கு மேற்பட்ட 3.5 லட்சம் பயனாளிகள் ஏற்கனவே தமிழகம் முழுவதும் தபால் நிலையங்கள் மூலம் முதியோர் ஓய்வூதியத்தைப் பெற்று வருகின்றனர்.
மாநிலத்தில் 80 வயதுக்குட்பட்ட 30 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு சேவை செய்ய உள்ளதாகவும் தபால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (IPPB) இப்போது செயல்படுவதால், பயனாளிகளின் கணக்குகளுக்கான நேரடிப் பலன்கள் மற்றும் ஆதார் அங்கீகாரம் ஆகியவை எளிதாக்கப்பட்டுள்ளன.
இது அரசின் நலத்திட்டங்களை தடையின்றி வழங்க உதவும். முன்னதாக, மூத்த குடிமக்களுக்கு மணியார்டர் மூலம் மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. விநியோகத்திற்கான குறைந்த பரிவர்த்தனை கட்டணங்களையும் மேற்கோள் காட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், தweமிழகத்தில் தபால் அலுவலகங்கள் மூலம் முதியோர் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி மாநில அரசுக்கு அஞ்சல் துறை கடிதம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“