திருச்சி, வெள்ளூர் மாரியம்மன் கோவிலை அறநிலையத்துறை கைப்பற்ற எதிர்ப்பு

திருச்சி முசிறி அருகே வெள்ளூர் கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோயிலை அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுக்கக் கூடாது என வலியுறுத்தி 8 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று போராட்டம் நடத்தினர்.

திருச்சி முசிறி அருகே வெள்ளூர் கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோயிலை அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுக்கக் கூடாது என வலியுறுத்தி 8 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று போராட்டம் நடத்தினர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
The public protested against the charity department taking over the Trichy Vellur Mariamman temple

திருச்சி வெள்ளூர் மாரியம்மன் கோவிலை அறநிலையத்துறை கைப்பற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திருச்சி முசிறி அருகே உள்ள வெள்ளூர் கிராமத்தில் 8 ஊரை சேர்ந்த பொதுமக்கள் வழிபடும் மகா மாரியம்மன் கோயில் உள்ளது.
இந்தக் கோயிலில் நடைபெறும் விழாக்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் ஆகியவற்றை பொதுமக்களின் ஒத்துழைப்போடு நிர்வாகி சீனிவாசன் என்பவர் தலைமையில் விழா குழுவினர் சேர்ந்து நடத்தி வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில் நிர்வாகி சீனிவாசன் மீது சிலர் ஊழல் குற்றச்சாட்டு புகார்களை அறநிலையத்துறை உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களுக்கு தொடர்ந்து அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிருப்த்தி அடைந்த 8 ஊர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் வெள்ளூர் மகா மாரியம்மன் கோயில் முன்பு திரண்டனர். அங்கு கோயிலை நிர்வகித்து வரும் நிர்வாகி சீனிவாசன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துபவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்வது, வெள்ளூர் மகா மாரியம்மன் கோயில் கிராமப்புற கோயில் என்பதால் இக்கோயிலை அரசு தனது கட்டுப்பாட்டில் எடுக்காமல் பொதுமக்களே நிர்வகித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வாயிற்கூட்டம் போட்டனர்.

இதனையடுத்து, கோயில் முன்பு பொதுமக்கள் திரண்டு இருப்பது குறித்து தகவல் அறிந்த அறநிலையத்துறை செயல் அலுவலர் மற்றும் ஆய்வர் வெள்ளூர் கிராமத்திற்கு நேரில் வந்தனர்.
அவர்களிடம் கிராம மக்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு கோயிலை எடுக்க கூடாது என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.

Advertisment
Advertisements

மனுவை சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பதாக அலுவலர்கள் தெரிவித்தனர். கிராமப்புற கோயிலை அறநிலையத்துறை நிர்வகிக்க கூடாது என வலியுறுத்தி, சுத்துபட்டு 8 கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் மாரியம்மன் கோயில் முன்பு திரண்டதால் முசிறி வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகின்றது.

அசம்பாவிதங்களை தடுக்க முசிறி காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் உதவி ஆய்வாளர் நாகராஜன் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

செய்தியாளர் க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: