தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.
இதையடுத்து, திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் தயாரிக்கப்பட்ட ஆர்.ஹெச்.200 சவுண்டிங் ராக்கெட் இன்று (பிப்.28,2024) குலசேகரத்தில் இருந்து ஏவப்பட்டது.
இந்த ராக்கெட்தான், பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டின் முன்னோடி ஆகும். இந்த ராக்கெட்டை பயன்படுத்தி காற்றின் திசை, வேகம், ராக்கெட்டுகளின் ஒலி வளர்ச்சி, ராக்கெட்டுகளின் மறுவாழ்வு உள்ளிட்டவை ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.
முன்னதாக திருச்செந்தூரில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், “குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட்டை விண்ணிற்கு செலுத்துவது மிகச் சுலபம். இங்கு, ரூ.1000 கோடி மதிப்பிலான பணிகள் விரைவில் முடியும் என நம்புகிறேன்.
ஸ்ரீஹரிகோட்டாவை விட குலசேகரப்பட்டினத்திலிருந்து ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கு 10-ல் ஒரு பங்கு செலவே ஆகிறது. இந்தியாவின் 2-வது ராக்கெட் ஏவுதளமாக குலசேகரப்பட்டினம் உள்ளது” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“