தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவ - மாணவியருக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை சனிக்கிழமை (டிச.24) முதல் தொடங்குகிறது.
இந்த நிலையில் பள்ளிக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அரையாண்டு தேர்வு விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் உள்ளிட்ட எந்த வகுப்புகளும் நடத்தக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், “இதுபோன்ற வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. எனினும், பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவ-மாணவியருக்கு அசைன்மெண்ட் கொடுக்கலாம்.
அவர்கள் அதனை வீட்டில் இருந்தே முடிக்க வேண்டும். பள்ளிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரையாண்டு விடுமுறை நாள்களில் சில பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன என புகார்கள் எழுந்த நிலையில் பள்ளிக் கல்வித் துறை இந்தச் செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளி மாணவ மாணவியருக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை டிச.24ஆம் தேதி தொடங்கி, புத்தாண்டு வரை அளிக்கப்பட்டுள்ளது. ஜன.2ஆம் தேதி திங்கள்கிழமை வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/