Advertisment

23 வயதில் நீதிபதியான கூலித்தொழிலாளி மகன்: சமூக ஆர்வலர்கள் வாழ்த்து

சிவில் நீதிபதிகளுக்கான முதல் நிலை தேர்வு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 9 இடங்களில் தேர்வு மையங்களில் நடைபெற்றது.

author-image
WebDesk
New Update
The son of an agricultural laborer from Trichy won the civil judge exam

விவசாய கூலித் தொழிலாளியின் மகனான பாலமுருகன் (23) சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

திருச்சி மாவட்டம் குண்டூர் அருகே உள்ள அயன்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளியின் மகனான பாலமுருகன் (23) சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார்.
மாநில அளவில் 33வது இடத்தையும், திருச்சி மாவட்டத்தில் முதலிடமும் பிடித்துள்ளார். எளிய ஓட்டு வீட்டில் படித்து நீதிபதியான இவரை அப்பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் பலரும் நேரில் சென்று பாராட்டி வருகின்றனர்.

Advertisment

தமிழ்நாட்டில் கீழமை நீதிமன்றங்களில், காலியாக உள்ள 245 சிவில் நீதிபதி பணியிடங்களுக்கு தேர்லு அண்மையில் நடந்தது.
இதில், 6031 ஆண்களும், 6005 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 12,037 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இவர்களுக்கான முதல் நிலை தேர்வு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 9 இடங்களில் தேர்வு மையங்களில் நடைபெற்றது.
இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வு நவம்பரில் நடந்தது. முதல்நிலை தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்முக தேர்வுக்கு தற்காலிகமாக 472 பேர் அழைக்கப்பட்டு, அதற்கான முடிவுகள் பிப்.10-ம் தேதி வெளியிடப்பட்டது.

அதன்படி, திருச்சி மாவட்டம் குண்டூர் அருகே உள்ள அயன்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளியான மாமுண்டி-விஜயா தம்பதியின் மகன் பாலமுருகன் தமது 23 வயதில் சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார்.

திருச்சி அரசு சட்டக்கல்லூரியில் இளநிலை சட்டம் பயின்ற இவர், ஏழ்மை நிலையை கருதி விவசாய கூலி தொழிலுக்கு சென்ற வந்தார். ஓய்வு நேரங்களில் தன் கனவாக சிவில் நீதிபதியாக வேண்டும் என்ற முனைப்பில் சட்டம் பயில்வதையே நோக்கமாக கொண்டிருந்தார்.
இந்தநிலையில், நடப்பாண்டில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவீல் நிதிபதி தேர்வு முடிவில், பாலமுருகன் மாநில அளவில் 33வது இடத்தையும் திருச்சி மாவட்டத்திலேயே முதலிடம் பிடித்துள்ளார். எளிய ஓட்டுவீட்டு கொட்டகையில் படித்து நீதிபதியான இவரை அப்பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் பலரும் நேரில் சென்று பாராட்டி வருகின்றனர். 

நீதிபதியானது குறித்து பாலமுருகனிடம் கேட்டபோது தாம் ஆறாவது படிக்கும் போதே வக்கீல் ஆக வேண்டும், நீதியரசராக வேண்டும் என்ற கனவுடன் படித்து வந்த நிலையில், கனவு நினைவானது. நான் நீதிபதியாக பொறுப்பேற்ற பிறகு ஏழை பணக்காரன், சாதி மத பாகுபாடு இன்றி நியாயமான முறையில் தீர்ப்பை வழங்குவேன் எனத் தெரிவித்தார்.

பாலமுருகன் பயிற்சி காலத்திற்குப் பின்னர் நீதிபதியாக பதவியேற்க உள்ளார் என்பதும், இதேபோல் திருவண்ணாமலையை சேர்ந்த 23 வயது இளம் பெண் ஸ்ரீபதி தமிழகத்தின் முதல் பழங்குடியின பெண் நீதிபதியாக தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment