Advertisment

சபாநாயகர், ஆளுநருக்கு எதிரான வழக்கு முழு பெஞ்ச்சுக்கு மாற்றம் : நீதிபதி உத்தரவு

தகுதி நீக்கம் செய்யப்பட்ட டி.டி.வி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தொடர்ந்த, வழக்கை முழு அமர்விற்கு மாற்றி ஐகோர்ட் தனிநீதிபதி உத்தரவிட்டார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
advocate general vijay narayan, cm edappadi palaniswami,ttv dhinakaran, aiadmk, aiadmk merger, speaker dhanapal, chennai high court, TN government.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட டி.டி.வி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தொடர்ந்த, வழக்கை முழு அமர்விற்கு மாற்றி ஐகோர்ட் தனிநீதிபதி உத்தரவிட்டார்.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கையும் முழு அமர்வே விசாரிக்கும் எனவும் உத்தரவு.

Advertisment

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், பழனியப்பன், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 18 பேரை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில், கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி (2017) தங்களை தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பாக அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

மேலும் மனுவில், சபாநாயகரின் இந்த நடவடிக்கை உள்நோக்கத்துடன் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இது அரசியல் அமைப்பு சட்டம் 10 வது அட்டவணைப்படி, ஒரு சட்டமன்ற உறுப்பினர் இரண்டு காரணங்களுக்காக தகுதி நீக்கம் செய்யலாம். ஒன்று, தான் சார்ந்த கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை தானாக முன்வந்து திருப்பி கொடுக்கும் போதும், இரண்டாவதாக, கட்சி உத்தரவுக்கு மாறாக சட்டமன்றத்தில் வாக்களிக்கும் போதோ எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யலாம். இந்த இரண்டு காரணங்களுக்குள் நாங்கள் வரவில்லை. அரசியல் அமைப்பு சட்டம் 10வது அட்டவணைக்கு மாறாக, சபாநாயகர் செயல்பட்டு, எங்களை தகுதி நீக்கம் செய்துள்ளார். சபாநாயகர், அரசின் அதிகாரத்துக்கு கட்டுபட்டு இணைந்து, உள்நோக்கத்துடன் செயல் படுகிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் அரசு மீது நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தபோது, ஆளும் கட்சியைச் சேர்ந்த 11 சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி கொறடாவின் உத்தரவுக்கு எதிராக செயல்பட்டனர். இதுகுறித்து, சபாநாயகரிடம் கொடுத்த புகார் மனு கடந்த 6 மாத காலமாக நடவடிக்கை எடுக்காமல் நிலுவையில் உள்ளது. ஆனால், எங்களுக்கு எதிராக கடந்த ஆகஸ்டு 28ம் தேதி கொடுத்த புகார் மீது அவசர, அவசரமாக விசாரித்து, 28 நாட்களுக்குள், எங்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். அரசியல் அமைப்பு சட்டம் கொடுத்த அதிகாரத்தின் நோக்கத்தை தவறாக பயன்படுத்தி, சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும்பட்சத்தில், அதற்கு சாதகமாக ஆளும் அரசுக்கு உதவிடவே எங்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

எங்களை தகுதி நீக்கம் செய்தது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது. சபாநாயகர் அரசியல் சாசனத்திற்கு விரோதமாகசெயல்பட்டுள்ளார். அதிகாரத்தை தவறாக, உள்நோக்கத்துடன் பயன்படுத்தி உள்ளார். ஆகவே, எங்களை தகுதி நீக்கம் செய்து கடந்த செப்டம்பர் 18ம் தேதி சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த தடைவிதிக்க வேண்டும். அதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்குகளில் மறு உத்தரவு பிறப்பிக்கும்வவரை சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவோ, 18 தொகுதிகளையும் காலியாக அறிவித்து தேர்தல் தேதியை அறிவிக்கவோ கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை தமிழக சட்டப்பேரவைக்கு எடுத்து சென்றதால் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட 21 திமுக உறுப்பினர்களுக்கு எதிராக அவை உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய கோரி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் தொடர்ந்த வழக்கும், இதே போல் அதிமுக கொறடா உத்தரவை மீறி வாக்களித்த ஓ.பன்னீர் செல்வம், செம்மலை உள்ளிட்ட 12 அதிமுக எம்.எல்.ஏ கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அவர்களை தகுதி நீக்கம் செய்ய கோரி திமுக கொறடா சக்கரபாணி மனுவும், கட்சி உத்தரவுகளை மீறி வாக்களித்தவர்கள் எதன் அடிப்படையில் அமைச்சர் பதவிகள் வழங்கபட்டது. எதிர்த்து வாக்களித்த போது அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்து விடுகின்றனர். எனவே துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் பதவிகளில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும் என திமுக சட்டமன்ற உறுப்பினர் கு.பிச்சாண்டி சார்பில் தாக்கல் செய்த மனுவும் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த அனைத்து மனுக்களும் உயர்நீதிமன்ற நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி இந்த வழக்குகள் அரசியல் சாசன உரிமைகள் குறித்த வழக்கு என்பதால் இதனை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு வழக்கை விசாரிக்க தலைமை நீதபதிக்கு பரிந்துரை செய்ய உள்ளதாகவும், எனவே வழக்கை முழு அமர்வு விசாரிக்க வேண்டும் என தெரிவித்து வழக்கை மாற்றி உத்தரவிட்டார்.

அனைத்து வழக்கையும் அதிக எண்ணிக்கையில் அடங்கிய நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் விசாரிக்கும் நீதிபதி ரவிசந்திரபாபு உத்தரவிட்டார்

இது தொடர்பாக தலைமை நீநிபதிக்கு பரிந்துரை செய்வதாகவும், இந்த வழக்கு அரசியல் அமைப்பு பிரச்சினைகளில் அளுநர் மற்றும் சபாநாயகர் அதிகாரங்களில் தலையிட முடியுமா? என்ற கேள்வி மற்றும் வழக்கின் முக்கியத்துவம் கருதி மாற்றுவதாக நீதிபதி உத்தரவு.

மேலும் இது தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் புதிதாக அமைக்க உள்ள அமர்வு விசாரிக்கும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Chennai High Court Mk Stalin Madras High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment