சட்டசபையில் ஜெயலலிதா படம் வைப்பதா வேண்டாமா என்பதை சபாநாயகர் முடிவு செய்யட்டும் : தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி

அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படம் வைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே தாக்கல் செய்த வழக்கையும் விசாரிக்க வேண்டும் என திமுக தரப்பு வழக்கறிஞர் கோரினார்.

jayalalithaa

சட்டமன்றத்தில் ஜெயலலிதா படம் வைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அது தேர்தலில் எதிரொலிக்கும். அப்போது வரும் சபாநாயகர் படத்தை அகற்றுவது குறித்து முடிவு எடுத்துக் கொள்ளட்டும்; தற்போதைய சபாநாயகரின் அதிகார வரம்புக்குள் நீதிமன்றம் தலையிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட படத்தை அகற்றக் கோரி திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

திமுக எம்எல்ஏ தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட ஜெ’வின் படத்தை சட்டமன்றத்தில் வைத்தால், காவல் நிலையங்களில் ரவுடிகளின் புகைப்படங்கள் வைக்கும் சூழல் ஏற்படும் எனவும், சபாநாயகரின் உத்தரவு நீதித்துறை ஆய்வுக்கு உட்பட்டது. இந்த வழக்கில் அரசியல் சாசன கேள்வி உள்ளது. அதற்கு இந்த நீதிமன்றம் பதில் சொல்ல வேண்டும் எனவும் வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் அது தேர்தலில் எதிரொலிக்கும். அப்போது வரும் சபாநாயகர் படத்தை அகற்றுவது குறித்து முடிவு எடுத்துக் கொள்ளட்டும்; சபாநாயகரின் அதிகார வரம்புக்குள் நீதிமன்றம் தலையிட முடியாது என்றார்.

மேலும், தனி மனித உரிமை தொடர்பான விவகாரம் என்பதாலேயே டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ’க்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு குறித்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படம் வைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே தாக்கல் செய்த வழக்கையும் விசாரிக்க வேண்டும் என திமுக தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்ததை அடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதிகள் மார்ச் 2ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: The speaker concludes whether the film should be put up in jayalalithaas film

Next Story
நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த மாட்டீர்களா? ஐகோர்ட் கண்டனம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express

X