கலைஞர் கருணாநிதி கொண்டு வந்த முத்தான 94 திட்டங்கள்

காலம் கடந்தும் அனைவரின் வாழ்விலும் நீங்காத இடம் பெற்றிருக்கும் கருணாநிதி தமிழர்களுக்கும் தமிழுக்கும் அளித்த பெருங்கொடைகள் ஒரு பார்வை

By: Updated: August 8, 2018, 12:11:50 PM

கருணாநிதி அறிமுகப்படுத்திய திட்டங்கள் : கலைஞர் கருணாநிதி சட்டமன்றத்தில் காலடி வைத்து சுமார் 60 ஆண்டுகள் ஆகிவிட்டன. திமுக தலைவராக  பொன்விழா கண்ட பின்பே திராவிட நாயகனை காலன் அவரை அழைத்துக் கொண்டான்.

திமுகவும் அதன் கழகக் கொள்கைகளும் இன்றைய தமிழகத்தின், ஏனைய இந்தியாவில் இருந்து முற்போக்குடன் சிந்திக்கும் தமிழகத்தின் முதுகெலும்பு என்பதில் யாருக்கும் மறுப்பேதுமில்லை.

கலைஞரின் ஆட்சி காலத்தில் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட சலுகைகள் திட்டங்கள் இந்த மாற்றங்களுக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்பதிலும் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. தமிழுக்கும் தமிழகத்திற்கும் தமிழர்களுக்கும் கலைஞர் கருணாநிதி அறிமுகப்படுத்திய திட்டங்கள் ஒரு பார்வை.

கருணாநிதி அறிமுகப்படுத்திய திட்டங்கள்

1. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உருவாக்கப்பட்டது.

2. கை ரிக்சாவின் பயன்பாடு ஒழிக்கப்பட்டு சைக்கிள் ரிக்சா அளிக்கப்பட்டது. ஒரு மனிதனை மற்றொரு மனிதன் ரிக்சாவில் வைத்து தள்ளிச் செல்லும் முறையை ஒழித்தார்.

3. சின்னஞ்சிறு கிராமங்களுக்கும் கூட சாலை வசதிகள் உருவாக்கப்பட்டது. தனியார் வசம் சிக்கியிருந்த போக்குவரத்துத் துறை அரசுடமையாக்கப்பட்டது.

4. சிப்காட் தொழில் வளாகங்கள் உருவாக்கப்பட்டது.

5. சிட்கோ தொழில் வளாகங்கள் கொண்டுவரப்பட்டது

6. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தொழிற்நுட்ப பூங்காக்கள் உருவாக்கப்பட்டது

7. சேலத்தில் உருக்காலை கொண்டு வரப்பட்டது

8. தமிழக கிராமங்கள் அனைத்திற்கும் மின்சார வசதி உருவாக்கப்பட்டது

9. தடையற்ற மின்சாரம் கிடைக்க 8 இடங்களில் மின் நிலையங்கள் உருவாக்கப்பட்டது

10. தமிழகம் வளர்ச்சியின் பாதையில் செல்ல கருணாநிதி அறிமுகப்படுத்திய திட்டங்கள்
1997ல் தரமணி டைடல் பார்க் தகவல் தொழில் நுட்பதிற்கென புதுக் கொள்கைகள் உருவாக்கப்பட்டது.

11. 14,600 கோடி ரூபாய் மதிப்பிலான சென்னை மெட்ரோ திட்டம் கலைஞர் கருணாநிதியால் கொண்டுவரப்பட்டதாகும்

12.  108 ஆம்புலன்ஸ் சேவைகள் கருணாநிதியின் ஆட்சியில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது

13. குடிசை மாற்று வாரியம் உருவாக்கப்பட்டு நகரங்களில் இருந்து குடிசைகள் அனைத்தும் அடுக்குமாடி குடியிருப்புகளாக உருப்பெற்றன. 2010ம் ஆண்டு கலைஞர் இலவச வீடு வழங்கும் திட்டம் தமிழகத்தில் எங்குமே குடிசைகள் இருக்கக் கூடாது என்ற காரணத்தால் உருவாக்கப்பட்டது.

14. சென்னையில் அதிக அளவு கார் தொழிற்சாலைகளை உருவாக்கி தமிழகத்தின் பொருளாதரத்தில் ஒரு மைல் கல்லை அடைய வைத்த பெருமை கருணாநிதிக்கு உண்டு. அதனால் தான் சென்னை ஆசியாவின் டெட்ராய்ட் என்று அறியப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

15. மினிபஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

அரசு ஊழியர்களுக்கு கொண்டு வரப்பட்ட திட்டங்கள்

16. அரசு ஊழியர்கள் குடும்ப நல திட்டம் உருவாக்கப்பட்டது.

17. தமிழக காவல்துறையினருக்கு ஆணையம் அமைக்கப்பட்டது.

18. மே 1ம் தேதி ஊதியத்துடன் கூடிய அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

19. அரசு ஊழியர்கள் உயிர் இழக்கும் பட்சத்தில் அவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி அளிக்கும் பழக்கம் ஆகியவற்றையும் கூட கருணாநிதி கொண்டுவந்தார்.

விவசாயிகளுக்காக கருணாநிதி அறிமுகப்படுத்திய திட்டங்கள்

20. விவசாயத்திற்கு இலவச மின்சாரம் (இந்தியாவிலேயே இது போன்ற திட்டம் உருவாக்கப்பட்டது அப்போது தான்)

21. உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டு விளைபொருட்களை இடைத்தரகர்கள் இல்லாமல் வாடிக்கையாளர்களிடம் சென்று சேர்த்தவர் கலைஞர் கருணாநிதி.

22. விவசாயிகளுக்காக 7 ஆயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்து அறிவித்தது.

23. விவசாயக் கூலிகளுக்கு சம்பள நிர்ணயம் கொண்டு வரப்பட்டது

24. கிராமப்புற வளர்ச்சிக்கென நமக்கு நாமே திட்டம் உருவாக்கப்பட்டது. அரசு மானியத்துடன் தங்களின் தேவைகளே தாங்களே பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று அறிமுகமாக்கப்பட்டது.

25. கிராமப்புற மேம்பாட்டிற்காக அண்ணா மறுமலர்ச்சித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.

பெண்களுக்கான திட்டங்கள்

26. திமுக கட்சியின் மூத்த பெண் தலைவர் மூவலூர் ராமாமிர்தம் அவர்களின் நினைவாக  ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித் திட்டம்

27. கைம்பெண்களின் மறுமணத்தை ஊக்குவிக்கும் விதமாக கைம்பெண் மறுமண நிதி உதவித் திட்டம் ஆகியவற்றை கொண்டுவந்தவர் கலைஞர் கருணாநிதி.

28. அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது.

29. சொத்தில் பெண்களுக்கு சம உரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டது.

30. பெண்களுக்கான இலவசப் பட்டப் படிப்பிற்கான திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

31. 33% பெண்களுக்கான இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு மிகவும் வெற்றி கரமாக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன.

32. கர்பிணிப் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டது.

33. ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்புகள் வழங்கப்பட்டது.

34. 1989ல் பெண்களுகள் பொருளாதாரத்தில் யாரையும் நம்பாமல் சுயமாக இயங்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது பெண்கள் சுய உதவிக் குழுக்கள். இதன் மூலம் தமிழகத்தில் பெண்களால் சுய தொழில்கள் அதிகம் உருவாகின.

தமிழுக்காக கருணாநிதி அறிமுகப்படுத்திய திட்டங்கள்

35. இந்தியாவின் இறுதிப் புள்ளி அல்லது மறுமலர்ச்சி இந்தியாவின் தொடக்கப்புள்ளியாக இருக்கும் தமிழகத்தின் தென் முனையில் அய்யன் வள்ளுவனுக்கு வைக்கப்பட்டது 133 அடி உயரமுள்ள சிலை.

36. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக பேசப்பட்டு வரும் தமிழ் மொழிக்கு செம்மொழி அங்கீகாராத்தினை பெற்றுக் கொடுத்துவர் கருணாநிதி.

37. கோவையில் மிக பிரம்மாண்டமாய் தமிழ் அறிஞர்கள் படை சூழ வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது செம்மொழி மாநாடு.

38. சிலப்பதிகார நாயகியான கண்ணகிக்கு தமிழர் கடற்கரையில் சிலை நிறுவப்பட்டது.

39. தமில் ஆண்டு வரிசைக்கு திருவள்ளுவர் ஆண்டு என்று பெயரிட்டார்

40. சித்திரை ஒன்று தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டாலும் தைத்திருநாளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது

41. மெட்ராஸ் மாகாணம் அண்ணாவின் உழைப்பால் தமிழ் நாடு என்றானது. கலைஞரின் முயற்சியால் மெட்ராஸ் சென்னை என்றானது

42. மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளை அவர்களின் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்து 1970களில் இருந்து அனைத்துவிதமான பொது நிகழ்ச்சிகளிலும் பாடப்பட்டது.

43. ஆளுநர்கள் இல்லாமல் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் போன்ற நாட்களில் மாநில முதல்வர்கள் கொடியேற்ற வழிவகை செய்தவர் கலைஞர்.

44. தமிழ் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கும் வகையில் 20% இட ஒதுக்கீடு வழங்கியவர் கருணாநிதி.

பொதுவுடமை

45. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று அறிவிப்பினை வெளியிட்டவர் கருணாநிதி.

46. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர்களுக்கான கல்வி தொகை உயர்த்தப்பட்டது.  அவர்களுக்கான விடுதிகள் அதிகமாக திறக்கப்பட்டன.

47. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 31 சதவீதம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 18 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது

48. அனைத்து சமூகத்தினரும் சேர்ந்து வாழும் வகையில் சமத்துவபுரங்கள் தமிழகமெங்கும் உருவாக்கப்பட்டன

49. இஸ்லாமிய சமூகத்தினருக்கு 3.5% இட ஒதுக்கீட்டினை அளித்தார்

50. உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இணைத்தார்.

51. ஆதி திராவிட மக்களுக்கு இலவச வீடுகள் கட்டித்தரப்பட்டது

52. கலப்புத் திருமணங்கள் பெருமளவில் ஊக்குவிக்கப்பட்டது. கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு ஊக்கத் தொகை தந்து கௌரவம் செய்தது திமுக அரசு

கல்வித்துறையில் கொண்டு வரப்பட்டத் திட்டங்கள்

53. பொறியாளர் பட்டப்படிப்பிற்காக நடைமுறையில் இருந்த நுழைவுத் தேர்வினை ரத்து செய்யப்பட்டது.

54. மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கப்பட்டது.

55. அதிமுக அல்லது திமுக என்று யார் ஆட்சிக்கு வந்தாலும் காமராஜரால் கொண்டுவரப்பட்ட மத்திய உணவுத்திட்டத்தினை ஒரு போதும் நிறுத்தியது கிடையாது. 2006ம் ஆண்டு ஆட்சியின் போது மாணவர்களுக்கு மத்திய உணவில் வாரம் இரண்டு முட்டை தந்து சிறப்பு ஆணை வெளியிட்டார்.

56. மாவட்டந்தோறும் அரசு மருத்துவமனைகளுடன் கூடிய அரசு மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டது.

57. தமிழகத்தில் அதிக அளவு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகமாக்கப்பட்டது.

58. நெல்லையில் மனோன்மணியம் பல்கலைக்கழகம் தொடங்கி, சேலத்தில் பெரியார் பல்கலைக் கழகம், சென்னையில் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழங்கள் கட்டப்பட்டது.

கருணாநிதி அறிமுகப்படுத்திய இதர திட்டங்கள்

59. நில விற்பனை வரையறை சட்டம்

60. பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம்

61. தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கான ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது

62. தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தினை நிறுவியவர் கலைஞர் கருணாநிதி

63. பிச்சைக்காரர்கள் மற்றும் தொழுநோயாளிகளுக்கான மறுவாழ்வு மையங்கள் இவரின் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது

64. ஊனமுற்றோர் மறுவாழ்வுத் திட்டத்தினை கொண்டுவந்தார்

65. ரேசன் கடைகளில் ஒரு கிலோ அரிசியினை 2 ரூபாய்க்கும் பின்னர் 1 ரூபாய்க்கும் விற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

66. மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்  அல்லது கலைஞர் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வரப்பட்டது.

67. மக்களுக்கு இலவச கண் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு பின்னர் இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது

68. அரவாணிகள் என்று அழைக்கப்பட்ட மூன்றாம் பாலித்தினவர்களுக்கு திருநங்கைகள் திருநம்பிகள் என்று பெயர் சூட்டி அவர்களுக்கான தனி நல வாரியம் அமைக்கப்பட்டது.

69. நாட்டுப்புற கலைஞர்களுக்கான நலவாரியத்தினையும் அமைத்துக் கொடுத்தது திமுக தலைமை

70. மொழிப்போராட்டத்தில் பங்கேற்ற வீரர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கப்பட்டது

71. சுதந்திரந்திரப் போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி அறிவித்தது

72. ஏழை மக்களுக்கு இலவச வேஷ்டி சேலைகள் இவரது ஆட்சியில் இருந்து தான் தரப்பட்டது.

73. சீரான போக்குவரத்து வசதிகளை மக்கள் அடைய நான்கு வழிச் சாலைகள் அதிகம் உருவாக்கப்பட்டன.

74. போக்குவரத்துத் துறையை அரசுடமையாக்கியது மற்றுமின்றி அதற்கென துறையை உருவாக்கியவர் கலைஞர்

75. நேரடி நெல் கொள்முதல் மையங்கள் அமைக்கப்பட்டது.

76. உள்ளாட்சி மற்றும் கூட்டுறவுத் தேர்தல்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது.

77. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அம்பேத்கர் பெயரில் சட்டக் கல்லூரி உருவாக்கப்பட்டது

78. இஸ்லாமியர்களுக்காக உருது அகாதெமி உருவாக்கப்பட்டது.

79. தேர்வுகளில் மாவட்ட மாநில அளவில் முதல் மூன்று இடம் பிடிப்பவர்களுக்கு மேற்படிப்புக்கு உதவித் தொகை வழங்கி சிறப்புச் செய்தவர் கருணாநிதி

80. சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த சுமார் 23 மேம்பாலங்கள் கட்டப்பட்டது.

81. ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

82. மாவட்டங்களுக்குள் நதி நீர் இணைப்பு சாத்தியப்படுத்தப்பட்டது.

83. காமராஜரின் பிறந்த நாளை கல்வி மேம்பாட்டு நாளாக அறிவித்தவர்

84. 420 பேரூராட்சிகள் உருவாக்கப்பட்டது

85. ராமநாதபுரம் – பரமக்குடி கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது

86. மாலை நேரம் மற்றும் விடுமுறை தின நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டது.

87. மதுரையில் உயர் நீதிமன்றக் கிளை நிறுவப்பட்டது.

88. ராஜராஜன் ஆயிரமாவது ஆண்டு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

89. இவர் ஆட்சியின் கீழ் 12 அரசு பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன.

90. பேருந்து போக்குவரத்துக் கட்டணம், பால் விலை, மற்றும் மின்சாரக் கட்டணங்களின் விலை உயர்த்தப்பட்டது கிடையாது

91. இலவச வண்ண தொலைக்காட்சிகளை கொடுத்தார்

92. உணவுப் பொருட்களை மலிவு விலையில் ரேசன் கடைகளில் இருந்து பெற்றுக் கொள்ளும் படி புதிய அறிவிப்புகளை எப்போதும் வெளியிடுவார் கருணாநிதி.

93. 10 வகுப்பு வரை தமிழ் கட்டாயப்பாடமாக்கப்பட்டது

94. சுயமரியாதை என்ற பெயருக்கு சொந்தக்காரராய் என்றும் நிலைத்து நிற்கும் கருணாநிதி சுயமரியாதை தமிழகத்தை தமிழர்களுக்காக உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்.

இராஜாஜி இல்லத்தில் நடைபெற்று வரும் அஞ்சலி பற்றிய செய்தியினை படிக்க 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:The special schemes introduced by dmk chief karunanidhi

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X